Untitled Document
போலி ஆவணம் மூலம் கடன் வழங்கிய வங்கி மேலாளர்கள் சிறையில் அடைப்பு
கருத்துகளை தெரிவிக்க

மதுரை: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பாளையங்கோட்டை கிளையில் கடந்த 2007 முதல் 2010 வரை முதன்மை மேலாளராக பணியாற்றியவர் பாலசுப்பிரமணியன்(55). இவர் தற்போது ஈரோடு மண்டல அலுவலகத்தில் முதன்மை மேலாளராக பணியாற்றி வருகிறார். பாளையங்கோட்டையில் பணியாற்றிய போது போலி ஆவணங்கள் மூலம் கடன் வழங்கி வங்கிக்கு ரூ.2 கோடியே 42 லட்சத்து 37 ஆயிரம் இழப்பு ஏற்படுத்தியதாக, முதன்மை மேலாளர் பாலசுப்பிரமணியன், அதிமுக முன்னாள் அமைச்சர் அம்மமுத்து பிள்ளை, கல்யாணசுந்தரம், மகாலிங்கம், அன்ன சரஸ்வதி, மோகன்ராஜ், கீதா, பார்வதி ஆகியோர் மீது சிபிஐ போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் நேற்று பாலசுப்பிரமணியனை சிபிஐ போலீசார் கைது செய்து மதுரை சிபிஐ கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை வரும் ஜன.21 வரை காவலில் வைக்க நீதிபதி ஜெகந்நாதன் உத்தரவிட்டார்.

இதேபோல், போலி ஆவணம் மூலம் கடன் வழங்கி திருச்சி இந்தியன் வங்கி கன்டோன்மென்ட் கிளைக்கு ரூ. 1 கோடியே 5 லட்சம் இழப்பு ஏற்படுத்தியதாக தற்போது இந்தியன் வங்கி சென்னை கீழ்பாக்கம் கிளையில் முதன்மை மேலாளராக பணியாற்றி வரும் நடராஜன், கன்டோன்மென்ட் கிளை முதன்மை மேலாளர் பூர்ணசந்திரன், உதவி மேலாளர் சகாதேவன் மற்றும் புல்லம்பாடி கந்தசாமி, திருச்சி கணியன், திருச்சி குரு ஓட்டல் ரங்கநாதன், திருப்பூர் ராமஜெயம் ஆகியோர் மீது சிபிஐ போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் நேற்று கைது செய்யப்பட்ட நடராஜன் மதுரை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு  ஜன.21 வரை ரிமாண்ட் செய்யப்பட்டார்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 
Follow Me

உணவு உற்பத்தி அதிகரிக்கும்

பாதுகாக்ககடந்த