பாக். அணு ஆயுதங்களை திருடி செல்லும் அபாயம்!
வாஷிங்டன்: பாகிஸ்தானில் அமெரிக்க படைகள் திடீர் ரெய்டு நடத்தி, அபோதாபாத்தில் ஒசாமா பின்லேடனை சுட்டுக் கொன்றன. அதன் பின் ஆளில்லா உளவு விமானம் டிரோன்கள் மூலம் தீவிரவாதிகள் பதுங்கி உள்ள இடங்களில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், எந்த நேரத்திலும் அமெரிக்க படைகள் புகுந்து அணு ஆயுதங்களை செயலிழக்க செய்து விடும் என்ற அச்சம் பாகிஸ்தானில் உள்ளது.
இதையடுத்து தங்களிடம் உள்ள அணு ஆயுதங்களை ரகசியமான இடங்களுக்கு மாற்றி வருவதாக அமெரிக்காவில் இருந்து வெளியாகும் தி அட்லாண்டிக் நேஷனல் ஜர்னல் என்ற இதழ் பரபரப்பு செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து இந்த இதழ் வெளியிட்டுள்ள செய்தியில், ÔÔமுன்னாள் ராணுவ உயரதிகாரி கலீல் கித்வாய் தலைமையில் அணு ஆயுதங்கள் ரகசிய இடத்துக்கு எடுத்து செல்லப்படுகின்றன. அணு ஆயுதங்களை மிகுந்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்லாமல், சாதாரண டெலிவரி வேன்களில் எடுத்து செல்கின்றனர்.
அதுவும் நகரின் போக்குவரத்து நெரிசல் உள்ள நெருக்கமான பகுதிகள் வழியாக அணுஆயுதங்களுடன் வேன்கள் செல்கின்றனர். அந்த ஆயுதங்கள் வெடித்தால் ஒரு நகரமே அழிந்துவிடும் அபாயம் உள்ளது. அத்துடன், பாதுகாப்பு இல்லாமல் அணுஆயுதங்களை எடுத்து செல்வதால் அவற்றை தீவிரவாதிகள் திருடி செல்லும் சூழ்நிலையும் உள்ளதுÕÕ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த தகவல் எப்படி கிடைத்தது என்று இதழில் தெரிவிக்கப்படவில்லை.