கேரம் வீராங்கனை பாதிப்பில் உருவான கதை!
‘விளையாட வா’ பட பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குனர் கே. விஜய நந்தா கூறியது: ‘வெண்ணிலா கபடி குழு’ போல் விளையாட்டை மையமாக வைத்து வந்த படங்கள் வெற்றி பெற்றிருக்கிறது. சூளை, எண்ணூர் பகுதிகளில் ரோட்டோரம் கேரம் விளையாடுவார்கள். சிறுவயதில் பார்த்த விளையாட்டை படமாக்க ஆசை. இது ஆக்ஷன் விளையாட்டு அல்ல.
எனவே இந்த விளையாட்டை மையமாக வைத்து கதாசிரியர் கமலேஷ் குமார் ஆக்ஷன், சென்டிமென்டுடன் கதை எழுதினார். விஸ்வநாத் பாலாஜி ஹீரோ. திவ்யா பத்மினி ஹீரோயின். இந்த கதைக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தவர் சர்வதேச சாம்பியன் பட்டம் வென்ற இளவழகி என்ற கேரம் வீராங்கனை. இவர் மீன்பாடி வண்டி ஓட்டுபவரின் மகள்.
அவர் இந்தப் படத்தை பார்த்து பாராட்டினார். யதார்த்தத்தை மீறிய ஆக்ஷன் கதைகளில் உடன்பாடு இல்லை. பலம் வாய்ந்தவன் எப்படி தாக்குவான், பலமில்லாதவன் எப்படி தாக்குவான் என்பதை யதார்த்தமாக காட்டவே விரும்புகிறேன்.கே.திரிபுரசுந்தரி தயாரிப்பு. ஸ்ரீமுரளி இசை.