வர்மா இயக்கத்துக்கும் அவர் இயக்குற புதுபடத்துல நடிக்கற மதுவான ஷாலினி ஹீரோயினுக்கும் நெருக்கம் ஆயிடுச்சுன்னு பேசறாங்களாம்... பேசறாங்களாம்... இதை பத்தி இயக்கத்துக்கிட்ட கேட்டா கோபமாகுறாராம்... ‘என் படத்துல 3 ஹீரோயின் நடிக்கறாங்க. இதுல மது நடிகையோட எனக்கு நட்பு கூட கிடையாது. தைரியமிருந்தா இந்த கேள்வியை அவங்ககிட்ட கேட்டுக்கங்க’ன்னு எரிஞ்சு விழறாராம்... விழறாராம்...
பாலிவுட்டுக்கு போன ‘கஜினி’ ஹீரோயின், கேரளாவுல கடற்கரை பக்கம் பெரிய பிளாட் வாங்கி இருக்கறாராம்... இருக்கறாராம்... மம்மி, டாடியோட சமீபத்துல பிளாட்டுக்கு குடியேறிட்டாராம்... ஊர்ல இருந்து வந்தா தங்கறதுக்கு மண்டபம் மாதிரி அம்மணிக்கு தனி ரூம் ஒதுக்கிட்டாங்களாம்... கைநிறைய காந்தி பட நோட்டு குவியறதால அடுத்து எதுல இன்வெஸ்ட் பண்ணலாம்ன்னு லிஸ்ட் போடுறாராம்... நடிகை போடுறாராம்...
தமன்ன நடிகைக்கு தமிழ்ல படம் இல்லைன்னாலும் தொடர்ந்து தமிழ்ல நடிக்க ஆசையாம்... ‘தெலுங்குல ஏகப்பட்ட வாய்ப்பு வர்றதால நடிக்க முடியலை’ன்னு நடிகை சொன்னாலும் இங்க யாருமே கண்டுக்காததுதான் காரணமாம்... ஏன் இப்படி திடீர் பிரேக்குன்னு நடிகையும் அவரது தாய்க்குலமும் ரூம் போட்டு யோசிக்கிறாங்களாம்... யோசிக்கிறாங்களாம்...
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook