Untitled Document
2011
02
Nov
பேஷன் டிசைனிங் துறையில் கால்பதிக்க வேண்டுமா?


எவர்கிரீன் துறைகளில் ஒன்றாக இருப்பது பேஷன் டிசைனிங். நாகரீகம் வளர வளர இத்துறைக்கும் மவுசு அதிகரித்துக் கொண்டே போகிறது. வேலைவாய்ப்பு என்பது இத்துறையில் கணக்கில்லாமல் கொட்டிக் கிடக்கிறது. உலக அளவில் பேஷன் டிசைனிங் முடித்தவர்களுக்கு தனிமதிப்பும் தேவையும் அதிகம் உள்ளது. திறமை, புதிய சிந்தனை இருந்தால் போதும் இத்துறையில் ஜொலிக்கலாம். கோடிக்கணக்கில் சம்பாதிக்கலாம். பல்வேறு கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பேஷன் டிசைனிங் தொடர்பான இளங்கலை, முதுகலை, தொழிற்படிப்புகள் நேரடியாகவும், தொலைதூரக்கல்வி முறையிலும் வழங்கப்படுகின்றன.

மாணவ, மாணவிகள்  மத்தியிலும்  இப்படிப்புக்கும் கடும் கிராக்கி உள்ளது. அகமதாபாத்தில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன் கல்லூரியில் ஆடை வடிவமைப்பு தொடர்பான பல்வேறு பாடங்கள் நடத்தப்படுகின்றன.

* Graduate Diploma Programme in Design (GDPD) என்ற 4 வருட படிப்பில் 100 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்படிப்பில் சேர 1.6.2025 தேதிப்படி 20 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கு 3 வருடம் வயது வரம்பு சலுகை உண்டு. 2010-11ம் கல்வியாண்டில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

* Post Graduate Diploma Programme in Design (PGDPD) என்ற இரண்டரை ஆண்டு கால முதுகலை படிப்பில் மொத்தம் 245 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்படிப்பில் சேர 1.6.2025 தேதிப்படி 30 வயது நிரம்பியிருக்க  வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கு வயது வரம்பில் 3 வருடங்கள் சலுகை அளிக்கப்படும். ஏதேனும் ஒரு பட்ட படிப்பு அல்லது 4 வருட டிசைனிங் துறை சார்ந்த டிப்ளமோ முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

பொது நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும். இளங்கலை படிப்புக்கு 7.1.2025 அன்றும், முதுகலை படிப்புக்கு 8.1.2025 அன்றும் நுழைவுத் தேர்வு நடைபெறும். இத்தேர்வு சென்னை, ஐதராபாத், பெங்களூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நடக்கும். விண்ணப்ப கட்டணம் ரூ.1500. கட்டணத்தை National Institute of Design என்ற பெயரில் அகமதாபாத்தில் மாற்றத்தக்க வகையில் டிடி எடுத்து அனுப்ப வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி, மாற்றுத் திறன் மாணவர்கள் விண்ணப்பக்கட்டணம் ரூ.750 செலுத்தினால்  போதும்.

தபாலில் விண்ணப்பம் பெற கட்டண டிடி மற்றும் கோரிக்கை கடிதம், 9க்கு 12 அளவுள்ள ரூ.40 தபால் தலை ஒட்டப்பட்ட சுயமுகவரியிட்ட கவர் ஆகியவற்றை இணைத்து ‘National Institute of Design, Paldi, Ahmedabad 380007, India‘ என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். கட்டண சலுகை பெற விரும்புபவர்கள் சான்றொப்பம் பெற்ற சாதி, உடற்தகுதி சான்றிதழ் இணைக்க வேண்டும். www.nid.edu என்ற இணையதளத்திலும்   விண்ணப்பத்தை டவுன்லோடு செய்யலாம். விண்ணப்ப  கவரின்  மீது  NIDAdmission2012 என குறிப்பிட  வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 21.11.2011.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,

 




Follow Me
Tamil Cinema movies, Tamil Movie News, Tamil Cinema News, Gossip, Cinema Review, Kollywood News, Bollywood News, Hollywood News, Tamil Movie Stills, Shooting Spot, Audio Release, Actress gallery, Actor Gallery, Glamour
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,