| |||||
|
2011
30
Oct ![]() விஞ்ஞான வளர்ச்சி உச்சத்தை தொடுகின்ற இந்த நவீன காலத்திலும், பல கிராமங்களில் காத்து, கருப்பு, பேய், பிசாசு, ஆவி, முனி பற்றி அச்சமூட்டும் தகவல்கள் உலவி கொண்டுதான் இருக்கின்றன. அப்படி முனி பயத்தால் ஒரு கிராம மக்கள் ஊர்ஊராக அலைந்து கொண்டு இருக்கின்றனர். இடம் பெயர்ந்து சென்றாலும் முனியின் அட்டகாசம் தொடர்ந்தபடியே இருக்கிறது என்று சொல்லி திகிலூட்டுகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ளது உத்தனப்பள்ளி. இப்பகுதியில் கூடு மாக்கனப்பள்ளி என்ற கிராமம் உள்ளது. 250-க்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். இவர்களது மூதாதையர்கள் வனத்தை ஒட்டிய பகுதியில் வாழ்க்கை நடத்தி வந்தவர்கள். கிராமத்தில் தற்போது மக்கள் வசிக்கும் இடத்தில் இருந்து சுமார் 7 கி.மீ. தூரத்தில் இருக்கும் அடர்ந்த காட்டுப் பகுதி பழைய கூடு மாக்கனப்பள்ளி எனப்படுகிறது. 4 தலைமுறைக்கு முன்பு இந்த காட்டில்தான் மக்கள் வசித்து வந்திருக்கின்றனர். காடுகளில் கிடைக்கும் தேன், பழம் போன்ற பொருட்களை சேகரித்து பிழைத்தவர்கள். அந்த காலத்தில் ஆரம்பித்த முனியின் சேட்டைகளை மக்கள் இன்னும் அச்சத்தோடு சொல்கிறார்கள்.. அடர்ந்த காட்டை ஒட்டிய பகுதியில் சின்ன சின்ன மர வீடுகள் இருந்தன. மின்சார வசதி கிடையாது. மாலை 6 மணிக்கே கும்மிருட்டு சூழ்ந்துவிடும். ஓநாய்களின் ஊளை சத்தம் காதை பிளக்கும். திடீரென காட்டில் இருந்து கொடிய விலங்குகள் வெளியேறி, ஊருக்குள் புகுந்துவிடும். கண்ணில் படும் ஆடு, மாடுகளை கடித்து குதறி விடும். மனிதர்களை பார்த்தாலும் விடாது. விலங்குகளிடம் சிக்கி பலர் இறந்திருக்கிறார்கள்.
மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க
CUMBUM. P.T.MURUGAN - TRICHY
11/10/2025 -- 16:20:28 காட்டு முனியை பிடிக்க, கூண்டுகளை பயன்படுத்தலாம். தேவைப்பட்டால், அதிரடி படையை அங்கு அனுப்பி வைக்கலாம்.கைதேர்ந்த வைத்தியர்களை அனுப்பி நோயின் அபாயத்திலிருந்து மக்களை காக்கலாம். mani - trichy
11/10/2025 -- 16:57:55 என்ன கொடுமை சார் இது Suventheran - Srilanka
4/29/2012 -- 19:28:28 நம்ப முடியாமல் இருக்கிறது? இப்படியும் நடக்குமா... Palaniappan - Delhi
6/21/2012 -- 22:36:26 மிட் மிக்ஹ்ட் பே த்ருஎ. RANJAN - THIRUVALLUR
7/19/2012 -- 21:42:39 கடவுள் இருக்குக்க்ம்போது ஆவி இருக்காதா RANJAN - THIRUVALLUR
7/19/2012 -- 21:46:27 கடவுள் இருக்கிறார் nijandan - vallur
8/1/2025 -- 18:54:20 இதும் கடந்து போகும் வெங்கடேஷ் - தேவூர்_சேலம்
9/7/2025 -- 14:47:45 சார் என்ன கொடுமை இது
|
|