ஊராட்சி ஊழியர்கள் தலைவர்களாக தேர்வு
சூலூர் : சூலூர் ஒன்றியத்திற்குட்பட்ட ராசிபாளையம் ஊராட்சி மன்ற எழுத்தர் பூபதி. இவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, உள்ளாட்சி தேர்தலில், இதே ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டு 1591 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதேபோல், சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் பச்சாபாளையம் ஊராட்சி மன்ற உதவியாளராக இருந்த ரமேஷ் உள்ளாட்சி தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்தார். இவருக்கு எதிராக யாரும் மனுதாக்கல் செய்யாததால் போட்டியின்றி ஊராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.