இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு ராணுவத்தில் வேலை !
இந்திய ராணுவத்தில் 38வது ஷார்ட் சர்வீஸ் கமிஷன் (டெக்னிக்கல்) கோர்சில் சேர தகுதியானவர்களிடம் இருந்து ஆன் லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த இடங்கள்: 50. வயது: 20 லிருந்து 27க்குள் இருக்க வேண் டும். தகுதி: இன்ஜினியரிங் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இறுதி யாண்டு மாணவர்களும் விண்ணப் பிக்கலாம். இவர்கள் கல்லூரி முதல்வரிடமிருந்து குறிப்பிட்ட தேதிக்கு முன்னதாக தேர்வு முடிவு வெளியாகும் என்று உறுதி பத்திரம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்களுக்கு உள வியல் சார்ந்த 2 கட்ட தேர்வுகள், மருத்துவ பரிசோதனை நடத்தப் படும். தேர்ந்தெடுக்கப்பட்டவர் களுக்கு எஸ்எஸ்சி கோர்சிற்கு சென்னையிலுள்ள ஆபீசர்ஸ் டிரெய்னிங் அகடமியில் பயிற்சியளிக்கப்படும். 46 வார பயிற்சிக்குப் பின் லெப்டினன்ட் அந்தஸ்தில் நியமனம் செய்யப்படுவர்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க www.joinindian army.nic.in இணைய தளத்தை பார்க்கவும்.
பிரின்ட் அவுட் அனுப்ப வேண்டிய முகவரி: Additional Directorate General of Recruiting (Rtg6), TES Section, West Block3, R.K.PURAM, New Delhi 110 066.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: அக். 26.
பிரின்ட் அவுட் அனுப்ப கடைசி நாள்: நவ.10.