தினமும் குடிநீர் கிடைக்க என்னை தேர்ந்தெடுங்கள்!
ஆலந்தூர்: சென்னை மாநகராட்சி 162-வது வார்டு அதிமுக வேட்பாளர் ராமதாஸ் (எ) குட்டி ராமதாஸ் ஆலந்தூர் கண்ணன் காலனி, மாரிசன் தெரு, நங்கநல்லூர் போன்ற பகுதிகளில் நேற்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது: கவுன்சிலராக இருமுறை பணியாற்றியுள்ளேன். சமுதாய கூடம், மேல்நிலை நீர்தேக்க தொட்டி, ரேஷன் கடை, ஒருங்கிணைந்த குழந்தைகள் நல மையம், உடற்பயிற்சி கூடம், நூலகம், சுடுகாட்டுக்கு மதில்சுவர், சிமென்ட் சாலை, சோடியம் விளக்குகள் அமைத்தல் போன்ற திட்டங்களை செயல்படுத்தி உள்ளேன்.
ரூ.1 கோடி மதிப்பீட்டில் மின்சார தகன மேடை அமைக்க நடவடிக்கை எடுத்தேன். மக்களுக்கு தினமும் தேவையான அளவு குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்தேன். என்னை தேர்ந்தெடுத்தால் இந்த திட்டங்கள் தொடர உறுதுணையாக இருப்பேன். இவ்வாறு ராமதாஸ் கூறினார். வாக்கு சேகரிப்பின்போது நகர செயலாளர் ஜி.பி.லெனின், நலச்சங்கத்தை சேர்ந்த கோபால், தாடி ரவி, மாரிசன் ரவி மற்றும் மகளிர் அணியினர் உடன் சென்றனர்.