அரையிறுதியில் மோதும் அணிகள்!
சாம்பியன்லீக் 20-20ல் முதல் அரையிறுதி ஆட்டத்தில் நாளை பெங்களூர் - நியூசவுத்வேல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த ஆட்டம் பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் இரவு 8 மணிக்கு நடக்கிறது. 8-ம் தேதி நடைபெறும் 2வது அரையிறுதி ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மும்பை - சோமர்செட் மோதுகின்றன. பைனல் 9-ம் தேதி நடக்கிறது.