இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்பேஸ் டெக்னாலஜி கல்வி நிறுவனமானது ஆசியாவிலேயே முதல் ஸ்பேஸ் இன்ஸ்டிடியூட் என்ற பெருமையை பெற்றுள்ளது. உலகிலேயே விண்வெளி அறிவியல், தொழில்நுட்பம், தகவல்கள் குறித்து இள நிலை, முது நிலை, பிஎச்.டி. பட்டப்படிப்பு களை இந்த கல்வி நிறுவனம் வழங்குகிறது. விண்வெளி தொடர்பான விஷயங்களில் ஆர்வமுடைய இந்திய இளைஞர்களை ஊக்குவித்து, விண்வெளி துறை விஞ்ஞானியாகவோ, பொறியாளராகவோ உருவாக்குவதை இந்தியன் விண்வெளி ஆராயச்சிக் கழகம் நோக்கமாக கொண்டுள்ளது. பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, ஐஐஎஸ்டி. பிடெக். பட்டப்படிப்பில் 3 பாடப்பிரிவுகள் வழங்கப்படுகிறது.
பிடெக். பிசிக்கல் சயின்ஸ்: விண்வெளித் துறையில் பணியாற்றத் தேவையான ஆஸ்ட்ரோனமி, ஆஸ்ட்ரோபிசிக்ஸ், ரிமோட் சென்சிங், எர்த் சிஸ்டம் சயின்ஸ் மற்றும் கெமிக்கல் சிஸ்டம்ஸ் ஆகிய துறைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
பிடெக். ஏவியோனிக்ஸ் ப்ரோக்ராம்: பொதுவாக இந்த பாடப்பிரிவில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சிஸ்டம்ஸ் போன்ற துறைகள் கற்பிக்கப்படுகிறது. இத்துறை மாணவர்களுக்கு, அடிப்படை அறிவியல், ஏரோஸ்பேஸ் சிஸ்டம், பொருளாதாரம், மேலாண்மை மற்றும் இலக்கியத் துறைகளில் கல்வி அளிக்கப்படுகிறது.
பி.டெக். ஏரோஸ்பேஸ் பொறியியல்: பிளைட் மெக்கானிக்ஸ், தியரி ஆப் மெக்கானிக்ஸ், ஏரோ ஸ்பேஸ் ஸ்ட்ரக்சர், மேனுபேக்சரிங் புராசஸ், ஆட்டோமெடிக் கன்ட்ரோல் ஆகிய துறைகள் கற்பிக்கப்படுகிறது. இத்துறையை தேர்வு செய்யும் மாணவர்களுக்கு, ஏவுகணைகள், ராக்கெட்டுகள், விமானம், செயற்கைகோள் ஏவுகணை போன்றவற்றை தயாரிப்பது, அவற்றில் பணியாற்றுவதற்கு ஏற்ற வகையில் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook