கடலில் இயங்கும் பொருட்களை வடிவமைப்பது, பயன்படுத்துவது தொடர்பாக ஓஷன் இன்ஜினியரிங்கில் கற்றுத்தருகின்றனர். படகு, கப்பல், நீர்மூழ்கி வடிவமைப்பில் இவர் கள் முக்கிய பங்காற்றுகின்றனர். உப்புத் தன்மை, நீரின் அழுத்தம், கடல் அலை களை தாக்குப் பிடிக்கும் வகையில் வடிவமைக்க கற்றுத்தருகின்றனர். வழக்கமான சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்குடன் கடல் சார்ந்த அறிவியல் மற்றும் வடிவமைப்பு குறித்தும் பாடங்கள் உள்ளன.
தெர்மோ டைனமிக்ஸ், புளூயிட் மெக்கானிக்ஸ், எலெக்ட்ரிக்கல் சர்க்யூட் பற்றியும் கற்றுக்கொடுக்கின்றனர். டேட்டா அனாலிசிஸ், ஓஷன் இன்ஸ்ட்ரூமென்டேஷன், அண்டர் வாட்டர் அக்குஸ்டிக்ஸ், மரைன் ஹைட்ரோ டைனமிக்ஸ், ஓஷனோகிராபி, மரைன் ஜியோ மெக்கானிக்ஸ் போன்ற பாடங்கள் நடத்தப்படுகின்றன. துறைமுகங்கள் வடிவமைக்கவும், கடலில் கட்டுமானங்கள் அமைக்கவும் ஓஷன் இன்ஜினியரிங் படித்திருக்க வேண்டியது அவசியம்.
ஓஷன் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு கல்வி நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் உள்ளன. கடல் அரிப்பு, கடற்கரை எண்ணெய் வளம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, புவி வெப்பமாற்றம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, கடல் போக்குவரத்து தொடர்பான ஆராய்ச்சி பணிகளிலும் ஈடுபடலாம்.
இந்தியாவில் ஓஷன் டெக்னாலஜி கல்வியை இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி-சென்னை, இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி-காரக்பூர், நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி-கோழிக்கோடு, கொச் சின் யுனிவர்சிட்டி ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி- கொச்சி, நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி - சூரத்கல் ஆகிய கல்வி நிறுவனங்கள் வழங்குகின்றன.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook