ஐஐஎம் கல்வி நிறுவனத்தில் எப்.பி.எம். படிப்பு!
மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனம்பெல்லோ புரோகிராம் இன் மேனேஜ்மென்ட் (Fellow Programmed in ManagementFPM) படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்படிப்பில் சேர ஏதேனும் ஒரு இளங்கலை மற்றும் முதுகலை பாடத்தில் 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி அல்லது இளங்கலை பட்டத்தோடு கூடுதலாக சிஏ, ஐ.சி.டபிள்யூ.ஏ. மற்றும் சி.எஸ். போன்ற பாடத்தில் 55 சதவீத மதிப்பெண்களோடு தேர்ச்சி, மற்றும் பணியில் இரண்டு வருட அனுபவம் இருக்க வேண்டும்.
அல்லது பிஇ, பிடெக் பாடத்தில் 60 சதவீத மதிப்பெண்களோடு தேர்ச்சி மற்றும் பணியில் இரண்டு வருட அனுபவம் அல்லது தற்போது முதுகலை பாடத்தில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். கேட், ஜிமேட், மற்றும் ஆப்டிடியூட் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். விருப்பமுள்ளவர்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் உள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு செய்து, அத்துடன் ரூ.300க்கான டி.டி.யை இணைத்து வரும் ஜன.20க்குள், விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களை www.iimidr.ac.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.