Untitled Document
பி.எட். படித்தவர்களுக்கு விமானப்படையில் வேலை
கருத்துகளை தெரிவிக்க

விமானப்படையில் குரூப் ‘‘எக்ஸ்’’ பிரிவின் கீழ் உள்ள காலியிடங் களை நிரப்ப டிகிரி, முதுகலை படிப்புடன் பி.எட். படித்தவர்களிடமிருந்து விண் ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: சீனியர் நான்கமிஷன்டு ஆபீசர். கல்வித்தகுதி: கலை/வணிகவியல்/அறிவியல் பாடங்களில் டிகிரியுடன் பி.எட்., அல்லது 2 வருட ஆசிரியர் பணி அனுபவம். டிகிரி மற்றும் பி.எட்டில் 50 சதவீத தேர்ச்சி. அல்லது எம்.ஏ., ஆங்கிலம்/எம்எஸ்சி (கணிதம், இயற்பியல், கம்ப்யூட்டர் அறிவியல்)/ எம்சிஏ தகுதியுடன் பி.எட்., அல்லது 2 வருட ஆசிரியராக பணியாற்றிய அனுபவம்.

வயது: டிகிரியுடன் பி.எட்., தகுதி யுடையவர்கள் 1.1.1987க்கும் 31.5.1994க் கும் இடைப்பட்ட நாளில் பிறந்தவராக இருக்க வேண்டும் (இரு தேதிகள் உட்பட). அதிக பட்ச வயது வரம்பு:25. முதுநிலை படிப்புடன் பி.எட். தகுதி யுடையவர்கள் 1.1.1984க்கும் 31.5.1994க் கும் இடைப்பட்ட தேதியில் பிறந்தவராக இருக்க வேண்டும். ( இரு தேதிகள் உட்பட). அதிக பட்ச வயது வரம்பு: 28.

உயரம்: 152.5 செ.மீ., 5 செ.மீ., மார்பு விரியும் தன்மை கொண்டவராக இருக்க வேண்டும். உயரத்திற்கும், வயதிற்கும் ஏற்ற எடை.
விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு, உடற்தகுதித்தேர்வு, நேர்முகத்தேர்வு, மருத்துவ சோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத்தேர்வு 2011 மார்ச்சில் பெங்களூர், பாரக்பூர், மும்பை, போபால் ஆகிய ஊர்களில் நடைபெறும்.

மாதிரி விண்ணப்பத்தை www.carrerairforce.nic.in இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள லாம்.
விண்ணப்பத்தில் ஒட்டும் பாஸ் போர்ட் அளவு படம் டிச.8,2010க்கு முன்ன தாக எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும். ஒட்டப்பட்ட போட்டோவைப் போன்று மேலும் 2 நகல்களை வைத்து பின் செய்ய வேண்டும்.

விண்ணப்பத்துடன் வயது வரம்பு உறுதிப்படுத்த 10ம் வகுப்பு சான்றிதழின் அட்டெஸ்ட் நகல், கல்வித்தகுதி சான்றிதழ் மற்றும் மதிப்பெண் பட்டியல்களின் அட்டெஸ்ட் நகல்கள், ஆசிரியர் பணி அனுபவம் உறுதிப்படுத்தும் சான்றிதழ் களின் அட்டெஸ்ட் நகல், சுயமுகவரியிட்ட 24 செ.மீ நீளம், 10 செ.மீ., அகலம் உள்ள வெள்ளை நிற விண்ணப்ப உறை ஆகியவற்றை இணைத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பத்தை சாதாரண தபாலில் அனுப்ப வேண்டிய முகவரி:

President, Central Airman Selection Board, Post Box No.11807, New Delhi- 110 010.
விண்ணப்பத்தை அனுப்ப கடைசி நாள்: 10.1.2011.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 
Follow Me

உணவு உற்பத்தி அதிகரிக்கும்

பாதுகாக்ககடந்த