குத்துப்பாட்டுக்கு ஆடமாட்டேன் : சனா கான்
சனா கான் கூறியது: ‘சிலம்பாட்டம்’ படம் என்னை அடையாளம் காட்டியது. தொடர்ந்து ‘தம்பிக்கு இந்த ஊரு’, ‘பயணம்’ படங்களில் நடித்தேன். ‘ஆயிரம் விளக்கு’ படத்தில் சாந்தனு ஜோடி. இதன் ஷூட்டிங்கின்போது எனது அம்மாவுக்கு உடலநலமில்லாமல் போனது. அவரை மருத்துவமனையில் சேர்த்த நேரம். ஷூட்டிங், மருத்துவமனை என்று மாறி மாறி அலைந்தேன். கவலைகளை மறைத்துக்கொண்டு நடித்தேன்.
‘பயணம்’ படத்தில் சிகரெட் பற்றி நான் பேசிய வசனம் என்னை பிரச்னையில் சிக்க வைத்தது. அது முழு வசனமும் புரிந்துகொள்ளாததால் வந்த பிரச்னை. அது தீர்ந்துவிட்டது. தமிழில் குத்து பாடலுக்கு ஆடுவது, கெஸ்ட் ரோலில் நடிப்பது அதிகரித்துள்ளது. வளர்ந்து வரும் நிலையில் இதுபோல் நடிக்க விரும்பவில்லை. தெலுங்கில் ‘மிஸ்டர் நோக்கியா’ என்ற படத்தில் நடிக்கிறேன். தமிழில் புது பட ஸ்கிரிப்ட் கேட்கிறேன். இந்தியில் நடிக்கும் எண்ணம் உள்ளது.