ஃபோகஸ் அகடமியில் பயிற்சி பெற்று, இந்த ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் பெற்ற சிலர் தரும் வழிகாட்டுதல்.
எஸ்.வரலட்சுமி
இந்திய குடிமைப் பணி தேர்வுகளை எழுதவிருக்கும் மாணவர்களுக்கு வாழ்த்துக்கள். முதல் நிலைத் தேர்வு, முதன்மைத்தேர்வு, பெர்சனாலிட்டி டெஸ்ட் என மூன்று நிலைகளைக் கொண்டது இத்தேர்வு. முதல்நிலைத் தேர்வில் 2011-ஆம் ஆண்டு முதல் Aptitude Test இரண்டாம் தாளாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதல் தாள் பொது அறிவுப் பாடம். மற்ற இரண்டு நிலைகளும் முன்பு போலவே தொடர்கின்றன. வெற்றி பெற கடும் உழைப்பு தேவையில்லை. முறையான பயிற்சி தேவை.
நுட்பமான உள்வாங்கும் திறன், கூர்மையான நோக்கும் திறன் இவை வெற்றியின் அடிப்படை, நான் முன்று முறை நேர்முகத் தேர்வு எனும் பெர்சனாலிட் டெஸ்ட் வரை சென்று 3வது முறை வெற்றி பெற்றுள்ளேன். தற்போது ஐதராபாத்தில் குடிமைப் பணிக்கான பயிற்சியில் உள்ளேன். எனது வெற்றியில் ஃபோகஸ் அகடமியின் கௌரவ ஆலோசகர் சங்கரவடிவேலு IRS(R) நேர்த்தியான வழிகாட்டுதல் பெரும் பங்காற்றியது.
அஜாய்குமார்
சென்னை ஃபோகஸ் அகடமியில்தான் எனது ஐஏஎஸ் தேர்வுக்கான பயிற்சி தொடங்கியது. முதல்நிலைத் தேர்வில் மூன்று முறை தோற்றுவிட்டேன். நான்காவது முயற்சியில் முதல் நிலைத்தேர்வு, நிலைத்தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத்தேர்வு என அனைத்திலும் வெற்றி பெற்றேன். இந்திய குடிமைப் பணிக்கான வாய்ப்பினைப் பெற்றுள்ளேன். ஃபோகஸ் அகடமி வழிகாட்டுதல் குடிமைப்பணித் தேர்வுக்குத் தயாராகும் அனைவருக்கும் பயனுள்ள ஒன்றாகும்.
ஆர்.சிவா
ஐஏஎஸ் தேர்வில் வெற்றி என்பது எளிதில் கிடைத்துவிடுவதில்லை. நான் மூன்ற முறை நேர்முகத் தேர்வினை எதிர்கொண்டு அதில் இரண்டு முறை தேர்ச்சி பெறவில்லை. இந்த முறை வெற்றி பெற்றுள்ளேன். ஐதராபாத்தில் குடிமைப் பணிக்கான பயிற்சியில் உள்ளேன். ஏற்கனவே குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரியாக பணியாற்றினேன். தற்போது இப்பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு குடிமைப்பணி வாய்ப்பினைப் பெற்றுள்ளேன். ஃபோகஸ் அகடமி உந்து சக்தியாகவும், வழிகாட்டியாகவும் இருந்தது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook