பிவிஎஸ்சி படித்தவர்களுக்கு ராணுவத்தில் வாய்ப்பு!
ராணுவத்தின் Remount Veterinary Corp-ல் ஷார்ட் சர்வீஸ் கமிஷனில் கால்நடை மருத்துவத்தில் ஆண் பட்டதாரி காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படு கின்றன.
வயது: 4.10.2011ன்படி 21 லிருந்து 32க்குள். தகுதி: பிவிஎஸ்சி/பிவிஎஸ்சி மற்றும் ஏ. ஹெச்., பட்டப்படிப்பு தகுதி அல்லது அதற்கு இணையான வெளி நாட்டு பட்டப்படிப்பு தகுதி பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படுவோர் கேப்டன் தரத்தில் பணி அமர்த்தப்படுவர். பதவி உயர்வுக்கான வாய்ப்பு உண்டு. சம்பந்தப்பட்ட Meerut Contonment RVC Centre - College-ல் பயிற்சி அளிக்கப்படும்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
Directorate General Remount Veterinary Services (RV1), QMG‘ s Branch, Integrated Headquarters Of MoD (Army), West Block3, R.K.Puram,New Delhi 110 066.
மேலும் விவரங்களுக்கு எம்ப்ளாய்மென்ட் நியூஸ் செப்.3-9 தேதியிட்ட இதழை பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்.4.