மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நெல்லையில் உள்ள இஎஸ்ஐ மருத்துவ மனையில் காலியாக உள்ள பாரா மெடிக்கல் பணியிடங் களை நிரப்ப தகுதியானவர் களிடமிருந்து விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகின்றன. லேப் டெக்னீஷியன், லேபரேட்டரி அசிஸ்டென்ட், ரேடியோகிராபர், ஜூனியர் ரேடியாகிராபர், பார்மசிஸ்ட், ஓ.டி. டெக்னீஷியன், ஓ.டி. அசிஸ்டென்ட், பிளாஸ்டர் டெக்னீஷியன், பிளாஸ்டர் அசிஸ்டென்ட், டென்டல் டெக்னீஷியன், பிசியோ தெரபிஸ்ட், இசிஜி டெக்னீ ஷியன், ஸ்டாப் நர்ஸ், சிஎஸ்எஸ்டி டெக்னீஷியன், நர்சிங் ஆர்டர்லி/ஸ்டெரச் சர்/பேரர்/அட்டென்டன்ட், குக் மேட்/மசால்ஜி/பேரர் ஆகிய காலியிடங்கள் உள்ளன.
எழுத்துத்தேர்வு, நேர் முகத் தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். தர ஊதியம் ரூ.2 ஆயிரத்துக்கும் குறைவாக பெறும் பணிகளுக்குரிய விண்ணப்ப தாரர்களுக்கு கட்டணம் ரூ.75/. இதர விண்ணப்ப தாரர்களுக்கு ரூ.125/. கட்ட ணத்தை ‘‘ணிஷிமி சிஷீக்ஷீஜீஷீக்ஷீணீtவீஷீஸீ, கிநீநீஷீuஸீt ழிஷீ.01’’என்ற முகவரிக்கு சென்னையில் மாற்றத்தக்க வகையில் டிடியாக செலுத்த வேண் டும். டிடியின் பின்புறம் விண் ணப்பதாரரின் பெயர், முகவரி, விண்ணப்பிக்கும் பணியின் பெயர், இஎஸ்ஐ மருத்துவமனையின் பெயர் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும். இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங் களுக்கு www.esic.nic.in இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
The Medical Superin tendent, ESI Hospital, Tirunelveli Camp Office, ESI Hospital Cum-ODC, Ashok Pillar Road, K.K. Nagar, Chennai- 600078.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.1.2025
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook