Untitled Document
2011
15
Sep
சோப் ஆயிலில் சூப்பர் லாபம்!

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

வீட்டில் இருந்தபடியே குறைந்த முதலீட்டில் இயந்திரங்கள் எதுவும் இல்லாமல் சோப் ஆயில் தயாரிக்கலாம். இதன் மூலம் நன்றாக சம்பாதிக்கலாம் என்கிறார் கோவை காளம்பாளையத்தில் ஹக் புராடக்ட்ஸ் சோப் ஆயில் தயாரிக்கும் ரமணன். அவர் கூறியதாவது: கோவையில் தேசிய பஞ்சாலை கழக தரக்கட்டுப்பாட்டு பிரிவில் உதவி ஸ்பின்னிங் மாஸ்டராக 28 ஆண்டுகள் பணிபுரிந்தேன். 7 ஆண்டுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றேன். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற என் போன்றவர்களை, கோவையில் உள்ள சிறு தொழில் சேவை மையத்தினர் சுய தொழில் செய்வதற்கான பயிற்சிக்கு அழைத்தனர்.

அங்கு ஒரு மாதம் நறுமண சொட்டு நீலம், பினாயில், சோப் பவுடர் போன்றவை தயாரிக்க கற்றுக் கொடுத்தனர். ரூ.5 ஆயிரம் முதலீட்டில் சோப் ஆயில் தயாரிப்பதற்கான தொழிலை துவக்கினேன். நானே முதலாளியாகவும், தொழிலாளியாகவும் இருந்து மாதம் 200 லிட்டர் சோப் ஆயில் தயாரித்து விற்கிறேன். சோப் ஆயில் தயாரித்து விற்பவர்கள் பலர் இருந்தாலும், தரமாக தயாரித்து விற்பதால் ஆர்டர் தொய்வு இல்லாமல் கிடைக்கிறது. தினசரி 5 மணி நேரம் உழைத்தால் 10 லிட்டர் சோப் ஆயில் தயாரிக்க முடியும். 20 நாள் உழைப்பு, 10 நாள் விற்பனை என்று செயல்படுகிறேன். லாபகரமாக போகிறது.

ஊராட்சி, பேரூராட்சி நிர்வாகம் சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்தவர்களுக்கு சோப் ஆயில் தயாரிப்பு குறித்து ஒருநாள் பயிற்சி முகாம்களை நடத்துகிறேன். என்னதான் தரமாக தயாரித்தாலும், அதை நம்ப வைக்க வேண்டும். அதற்கு சோப் ஆயிலை சாம்பிள் கொடுத்து தரத்தை அறிய செய்யலாம். அப்படி கிடைக்கும் வாடிக்கையாளர்கள் நிரந்தரமாக ஆர்டர் கொடுப்பார்கள். இவ்வாறு ரமணன் கூறினார்.

பயிற்சிக்கு

பல்வேறு கிளீனிங் பவுடர், ஆயில்கள் தயாரிப்பு குறித்து மாவட்டங்களில் உள்ள சிறு தொழில் சேவை மையங்கள், மாவட்ட தொழில் மையம், மகளிர் திட்டம், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மற்றும் வேளாண் பல்கலைக்கழகம் போன்றவற்றின் மூலம் தொழில் முனைவோர் பயிற்சியும், சான்றிதழும் அளிக்கப்படுகிறது. தொழில் தொடங்க வங்கி கடனுதவிக்கும் பரிந்துரைக்கப்படுகிறது.

தயாரிப்பது எப்படி?

ஒரு பிளாஸ்டிக் வாளியில் 4 லிட்டர் வடிகட்டிய நல்ல தண்ணீரில் காஸ்டிக் சோடா 100 கிராம் போட வேண்டும். தண்ணீர் சூடாகும். மற்றொரு வாளியில் 4 லிட்டர் வடிகட்டிய நல்ல தண்ணீரில் சோடா ஆஷ் (வாஷிங் பவுடர்) ஒரு கிலோ போட வேண்டும். அதுவும் சூடாகும். இன்னொரு வாளியில் 2 லிட்டர் நல்ல தண்ணீரில் யூரியா ஒன்றரை கிலோ போட வேண்டும். தண்ணீர் குளிர்ந்து போகும். 3 வாளி நீரையும் ஒரு மணி நேரம் அப்படியே வைக்க வேண்டும். அவை சம வெப்ப நிலையை அடையும். 3 வாளிகளில் உள்ள நீரை ஒரு கேனில் கொட்டி கலக்க வேண்டும்.

இன்னொரு வாளியில் சிலரி ஒரு கிலோ, ஒலிக் ஆசிட் 100 கிராம் கலக்க வேண்டும். அதை கேனில் உள்ள கலவையில் கொட்டி சில்வர் கரண்டியால் நன்கு கலக்க வேண்டும். நுரை பொங்கி வரும். 2 மணி நேரம் காத்திருந்தால் நுரை வற்றி, சோப் ஆயில் கிடைக்கும். அதில் நறுமண லிக்விட் 15 மிலி கலந்தால் சோப் ஆயில் தயார். இதன் மூலம் 10 லிட்டர் சோப் ஆயில் கிடைக்கும்.

உபயோகிக்கும் முறை: 200 மிலி சோப் ஆயிலில் 10 லிட்டர் தண்ணீர் கலந்து பயன்படுத்த வேண்டும். 10 முதல் 15 துணி வரை அரை மணி நேரம் ஊறவைத்து கையாலோ, வாஷிங்மெஷின் மூலமோ துவைக்கலாம். துணி துவைக்க மட்டுமல்ல, பாத்திரம் கழுவ, தரை, கழிப்பறை, பாத்ரூம், வாகனங்களை சுத்தம் செய்யவும் பயன்படுத்தலாம். இதை பயன்படுத்துவதால் சருமத்துக்கு எவ்வித கேடும் ஏற்படாது.

சந்தை வாய்ப்பு

ஓட்டல்கள், லாட்ஜ்கள், மருத்துவமனைகள், பள்ளி, கல்லூரி விடுதிகள், வீடுகளுக்கு நேரில் விற்கலாம். இதன் மூலம் தினசரி 50 லிட்டர் எளிதில் விற்று விடலாம். சோப் ஆயில் தரத்தை வாடிக்கையாளர் அறிந்துவிட்டால், தொடர்ந்து ஆர்டர் கொடுப்பார்கள். மார்க்கெட்டில் பிராண்டட் சோப் ஆயில்களை விட பல மடங்கு விலை குறைவாகவும், பிராண்டட் சோப் ஆயில்களை போல் தரமானதாகவும் இருப்பதால் அதிகமானோர் வாங்குகிறார்கள்.

மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், அலுவலகங்களுக்கு ஒரு ஆண்டுக்கு தேவையான சோப் ஆயில் உள்ளிட்ட கிளீனிங் பொருள்கள் கொள்முதல் செய்ய டெண்டர் விடுவார்கள். அதிலும் விண்ணப்பித்து டெண்டர் பெற்று சப்ளை செய்யலாம். அதற்கேற்ப உற்பத்தி அளவையும் பெருக்கி கொள்ளலாம். சோப் ஆயிலோடு பினாயில், சோப் பவுடர், சொட்டு நீலம், கிளீனிங் பவுடர் உள்ளிட்ட பொருட்களை சப்ளை செய்தால் லாபம் அதிகரிக்கும்.

என்னென்ன தேவை?

சிலரி, காஸ்டிக் சோடா, சோடா ஆஷ், யூரியா, ஒலிக் ஆசிட், பெர்ப்யூம், தண்ணீர். இவை அனைத்தும் கெமிக்கல் கடைகளில் கிடைக்கிறது. ரூ.10 ஆயிரம் போதும் இந்த தொழில் செய்ய பெரிய அளவில் இடம் தேட வேண்டிய அவசியம் இல்லை. மூலப் பொருட்கள், தயாரித்த சோப் ஆயில்கள் இருப்பு வைக்க வீட்டுக்குள் பாதுகாப்பான சிறு இடம், சோப் ஆயில் தயாரிக்க வீட்டு பின்புறம் அல்லது ஒதுக்குப்புறமான சிறு இடம் போதுமானது. ரூ.10 ஆயிரம் முதலீட்டில் தளவாட சாமான்கள், ஒரு மாத சோப் ஆயில் உற்பத்திக்கு தேவையான கெமிக்கல்களை வாங்கி விடலாம்.

தளவாட சாமான்கள்
 
50 லிட்டர் கேன் 1, 25 லிட்டர் பிளாஸ்டிக் வாளி 1, 20 லிட்டர் வாளி 3, மக் 2, தண்ணீர் வடிகட்டி 1, சில்வர் கரண்டி, புனல் 1, பாட்டில் கழுவும் பிரஷ் 1, மற்றும் 2, 5 லிட்டர் காலி பாட்டில்கள், கேன்கள்.

உற்பத்தி செலவு

சிலரி ஒரு கிலோ ரூ.120, காஸ்டிக் சோடா 100 கிராம் ரூ.4, சோடா ஆஷ் ஒரு கிலோ ரூ.30, யூரியா ஒன்றரை கிலோ ரூ.12, ஒலிக் ஆசிட் 100 கிராம் ரூ.10, பெர்ப்யூம் 15 மில்லி ரூ.25, லேபிள் 200 ரூ.10, காலி பாட்டில்கள் ரூ.10 என ரூ.221 செலவாகும். இதர செலவுகள் உட்பட 10 லிட்டர் தயாரிக்க ரூ.230 வரை செலவாகும்.

வருவாய்

ஒரு லிட்டர் தயாரிக்க ரூ.23 செலவாகிறது. அதை உள்ளூரில் ரூ.35க்கும், வெளியூர்களில் ரூ.45க்கும் விற்கலாம். இதன் மூலம் ஒரு லிட்டருக்கு லாபம் ரூ.12க்கு குறையாமல் கிடைக்கிறது. ஒரு நாளில் 50 லிட்டர் வரை தயாரிக்கலாம் என்பதால் ரூ.12 வீதம் 50 லிட்டருக்கு ரூ.600 லாபம் கிடைக்கும். மாதம் 25 நாள் வேலை செய்தால் ரூ.15 ஆயிரம் லாபம் கிடைக்கும். வெளியூர்களில் விற்கும்போது போக்குவரத்து செலவு ஏற்படும். ஆனால் லாபம் அதிகமாக இருக்கும்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,

 




Follow Me
Tamil Cinema movies, Tamil Movie News, Tamil Cinema News, Gossip, Cinema Review, Kollywood News, Bollywood News, Hollywood News, Tamil Movie Stills, Shooting Spot, Audio Release, Actress gallery, Actor Gallery, Glamour
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,