Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2016
12
Nov
6 மாத கால அதிமுக ஆட்சியை எடைபோடும் தேர்தல் இது - அரவக்குறிச்சியில் மு.க.ஸ்டாலின் பேச்சு


திருச்சி, - அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் கே.சி.பழனிசாமியை ஆதரித்து திமுக பொருளாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று 2வது நாளாக பிரசாரம் செய்தார். கரூரில் இருந்து புறப்பட்ட மு.க.ஸ்டாலின் ஈசநத்தம், இந்திரா நகர், பள்ளப்பட்டி ஷா நகர், உருஸ் மைதானம், வேலம்பாடி அண்ணாநகர், அரவக்குறிச்சி ஏவிஎம் கார்னர், ராஜபுரம், சின்னதாராபுரம் தென்னிலை, க.பரமத்தி ஆகிய இடங்களில் திறந்த வேனில் நின்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து பேசினார். அவர் பேசியதாவது:

அரவக்குறிச்சியில் நடப்பது இடைத்தேர்தல் அல்ல. தேவையில்லாமல் நடத்தப்படுகிறது. 6 மாதமாக நடக்கும் அதிமுக ஆட்சியை எடைபோடும் தேர்தல். இந்த வாய்ப்பு யாருக்கும் கிடைக்கவில்லை. அரவக்குறிச்சி வாக்காளர்களுக்கு கிடைத்துள்ளது. அதை நீங்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். ஏற்கனவே 5 ஆண்டு ஆட்சி செய்து மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளனர். எப்படி வந்தனர். திமுகவிற்கும் அதிமுகவிற்கும் வாக்குவித்தியாசம் என்பது வெறும் 1.1 சதவீதம் மட்டுமே. அதாவது 4 லட்சத்து 41 ஆயிரத்து 684 வாக்குகள் மட்டுமே.கரூரில் அதிமுக அமைச்சர்களின் பினாமியாக இருந்த ஒருவரின் பங்களாவில் கோடிகோடியாக பணம் பிடிப்பட்டதாலும் ஆம்புலன்சில் பணம் கடத்தியதை தேர்தல் அதிகாரிகள் கண்டு பிடித்ததாலும் அரவக்குறிச்சியில் தேர்தல் நிறுத்தப்பட்டது.

ெஜயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் சட்டமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்த திட்டங்கள் மற்றும் பிரதமர் மோடியை நேரிடையாக சந்தித்து எதிர்ப்பு தெரிவித்த திட்டங்கள் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் என்ன மர்மம் உள்ளது என்பது தெரியவில்லை. ஏதோ ஒரு திட்டத்துடன் தான் இப்படிப்பட்ட நிலைமையை மத்திய அரசு உருவாக்கி வருகிறது. கடந்த நாடாளுமன்ற ேதர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோடி, வெளிநாட்டில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு கொண்டு வருவேன். அதில் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்து ெகாடுப்பேன் என வாக்குறுதி கொடுத்தார். ஆட்சிக்கு வந்த பின், யாருக்காவது 15 ரூபாயாவது டெபாசிட் போட்டாரா? இல்லை.

இன்றைக்கு கருப்பு பணத்தை ஒழிப்பேன் என கூறி ரூ.500, ரூ.1000 ஆகியவற்றை செல்லாது என அறிவித்துள்ளார். இதனால் மக்கள் கூட்டம் கூட்டமாக வங்கிகளுக்கு சென்று பணத்தை மாற்றமுடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனர். போதிய முன்னேற்பாடு செய்யாமல் திட்டத்தை செயல்படுத்தி உள்ளனர். அதை தமிழக அரசும் வேடிக்கை பார்க்கிறது.
கருப்பு பணத்தை ஒழிப்பேன் என பிரதமர் மோடி கூறிவருகிறார். பொது தேர்தலின் போது அரவக்குறிச்சி தேர்தல் ஏன் நிறுத்தப்பட்டது? அமைச்சர்கள் சிலரின் பினாமியாக இருந்த ஒருவரிடமிருந்து ேகாடிகோடியாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதன்பின்னர் அவர் மீது என்ன மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டது? ரூ.5 கோடியுடன் விட்டுவிட்டனர். அவரின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டதா, அவரிடம் இருந்த மேலும் கருப்பு பணம் மீட்கப்பட்டதா. சென்னையில் மேயர் மற்றும் அமைச்சர்களின் வீடுகளில் ரெய்டு நடந்தது. அங்கு கருப்பு பணம் மீட்கப்பட்டதா. பொது தேர்தலின் போது திருப்பூரில் 2 கன்டெய்னர் லாரிகளில் ரூ.570 கோடி பிடிப்பட்டது. அந்த பணத்தை மோடி மீட்டுவிட்டாரா? அதில் எந்த நடவடிக்கையும் இல்லை என்பதால் திமுக நீதிமன்றத்தை நாடியது. இன்னும் கருப்பு பணம் உள்ளது என வாதாடப்பட்டது. இதையடுத்து வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிடப்பட்டது. இந்த லட்சணத்தில் கருப்பு பணத்தை மீட்பேன் என கூறி வருகிறார். எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தற்போது கருப்பு பணத்தை ஒழிப்பதில் எடுக்கப்பட்ட நடவடிக்கையில் பொதுமக்களை மத்திய மற்றும் மாநில அரசுகள் அலைக்கழிக்க விட்டுள்ளனர்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement