பாகுபலி முதல் பாகத்தில் மகாராணி தேவசேனா கதாபாத்திரத்தில் அனுஷ்கா, அராஜக மன்னனாக ராணா, புரட்சியாளராக தமன்னா, பாகுபலியாக பிரபாஸ் நடித்திருந்தனர். முதல்பாகத்தில் சிறைபட்டிருக்கும் காட்சிகளில் மட்டுமே அனுஷ்கா நடிக்க வேண்டியிருந்ததால் அவருக்கு குறைவான காட்சிகளே இருந்தன. தமன்னாவுக்கு ஸ்டண்ட், காதல் என அதிரடி காட்சிகள் தரப்பட்டிருந்தன. இது அனுஷ்கா ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தகவல் இயக்குனர் ராஜமவுலிக்கு தெரியவர 2ம் பாகத்தில் அனுஷ்காவுக்கு அதிக காட்சிகள் ஒதுக்கினார்.
பாகுபலி முதல்பாகம் முடித்த கையோடு இஞ்சி இடுப்பழகி படத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட அனுஷ்கா அக்கதாபாத்திரத்துக்காக 100 கிலோ வெயிட் போட்டு குண்டானார். பாகுபலி 2ம் பாகம் தொடங்குவதற்கு முன் உடல் எடையை குறைத்து பழைய ேதாற்றத்துக்கு வந்துவிடுவதாக அனுஷ்கா கூறியதையடுத்து அவருக்காக படப்பிடிப்பை தள்ளி வைத்தார் ராஜமவுலி. ஆனால் அனுஷ்காவால் ஓரளவுக்கு மட்டுமே எடை குறைக்க முடிந்தது. இது ராஜமவுலிக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அனுஷ்காவுக்காக ஒதுக்கப்பட்டிருந்த பல காட்சிகள் குறைக்கப்பட்டது. அனுஷ்காவின் உடல்பருமன் தமன்னாவுக்கு லாபமாக அமைந்தது. 2ம் பாகத்தில் குறைவான காட்சிகளில் மட்டுமே நடிப்பதாக இருந்த தமன்னாவுக்கு கூடுதல் காட்சிகள் இணைக்கப்பட்டன. தனது கதாபாத்திரம்பற்றி தமன்னா கூறும்போது,’முதல்பாகத்தின் தொடர்ச்சியாக 2ம் பாகத்திலும் எனது அவந்திகா கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருக்கிறது. நிறைய ஆக்ஷன் காட்சிகளில் நடித்திருக்கிறேன். முதல்பாகத்தில் பார்த்ததுபோன்றே அதே துணிச்சலுடன் இதிலும் என்னை பார்க்கலாம்’ என்றார்.