4 பெண்களை மணந்த அதிமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து நீக்க ஜெ.வுக்கு மனைவி கண்ணீர் கடிதம்
9/23/2015 2:15:13 PM
சேலம்: கொலை மிரட்டல் விடுப்பதாக மாநகராட்சி அதிமுக கவுன்சிலர் மீது மனைவி போலீசில் புகார் அளித்தார். மேலும் அவரை அதிமுகவில் இருந்து நீக்க வேண்டும் என்று ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதி உள்ளார்.சேலம் மாநகராட்சி 20வது வார்டு அதிமுக கவுன்சிலர் ரவீந்திரன். இவரது மனைவி சுதா (45). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்கள், சேலம் சூரமங்கலம் அந்தோணிபுரத்தில் வசித்து வருகின்றனர். கவுன்சிலர் ரவீந்திரன், 20வது வார்டு செயலாளராகவும் உள்ளார். இந்நிலையில், சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் சுதா ஒரு புகார் தெரிவித்தார். அதில், அவர் கூறியிருப்பதாவது:எனக்கு திருமணமாகி 23 ஆண்டுகள் ஆகிறது. எனது கணவர் 20வது வார்டு கவுன்சிலராகவும், அதிமுக வார்டு செயலாளராகவும் உள்ளார். அவர், கடந்த 2 ஆண்டில் இதுவரை 4 பெண்களை திருமணம் செய்துள்ளார். அவர்களை அம்மா உணவகம் உள்பட பல்வேறு இடங்களில் வேலைக்கு சேர்த்து விடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இதுகுறித்து தட்டிக்கேட்டால், இந்த பதவியில் இருப்பவர்கள் இப்படித்தான் செய்வார்கள்.
அதற்கு உடன்பட்டு குடும்பம் நடத்துவதாக இருந்தால் இரு. இல்லாவிட்டால் விவாகரத்து பெற்றுக்கொள் என கூறி மிரட்டுகிறார். நான் கவுன்சிலர். எனக்கு மந்திரி, மாவட்ட செயலாளர், வட்ட செயலாளர் வரை அனைவரையும் தெரியும். அவர்கள் எனக்கு உதவிக்கு வருவார்கள். உனக்கு யார் வருவார்கள்? பதவியில் இருக்கும் வரையில் என்னை யாரும் ஒன்றும் செய்யமுடியாது என கூறி வருகிறார். இந்த பிரச்னைக்கு தீர்வு காண நீதிமன்றத்திற்கு சென்றும், என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை.இவ்வாறு புகார் மனுவில் தெரிவித்துள்ளார். புகார் மனுவை பெற்றுக்கொண்டு சிஎஸ்ஆர் பதிவுசெய்து இன்ஸ்பெக்டர் சாந்தி விசாரித்து வருகிறார். ரவீந்திரனை இன்று விசாரணைக்கு போலீசார் அழைத்துள்ளனர்.
ஜெயலலிதாவுக்கே கடிதம்போலீசில் புகார் அளித்த சுதா கூறியதாவது: வார்டு கவுன்சிலரான எனது கணவர், 2 ஆண்டுகளில் 4 பெண்களை திருமணம் செய்துள்ளார். ஒவ்வொரு பெண்களையும் திருமணம் செய்து கொண்டு, 3 மாதம் குடும்பம் நடத்துவார். பின்னர், அவர்களது தாலியை கழற்றி விட்டு, வேறு பெண்களுடன் வாழ்வார். தற்போது, சந்தியா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு, அவரை அம்மா உணவகத்தில் வேலைக்கு சேர்த்து விட்டுள்ளார். எனவே, தமிழக முதல்வர் அன்புகூர்ந்து எனது கணவர் போன்ற ஆட்களை கட்சியில் இருந்து நீக்க வேண்டும். இதுபற்றி அவருக்கே கண்ணீர் கடிதம் எழுதிவிட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.
can i take xyzal in the morning
canitake.net can i take xyzal in the morning