இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

உரைகள் வேண்டாம்; வேலை கொடுங்கள்: பாஜகவை திணறடிக்கும் ‘மோடி ரோஜ்கர் டூ’

2/23/2021 5:17:07 PM
கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த திருவில்லிபுத்தூர் காங். வேட்பாளர் மாதவராவ் உடல் இன்று அடக்கம்: கூட்டணி கட்சியினர், பொதுமக்கள் அஞ்சலி ஜெட் வேகத்தில் பரவும் கொரோனா: மீண்டும் தனிமை முகாமாக மாறும் பள்ளி, கல்லூரிகள்..! சென்னை மாநகராட்சி தீவிரம்

புதுடெல்லி: உரைகள் வேண்டாம்; வேலை கொடுங்கள் என்ற கோஷங்களுடன் டுவிட்டரில் ‘மோடி ரோஜ்கர் டூ’ என்ற ஹேஷ்டாக்கில் 6.74 லட்சம் பேர் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். ராகுல்காந்தியும் இந்த ஹேஷ்டேக்கில் தனது கருத்தை பதிவு செய்துள்ளதால், இந்த ஹேஷ்டேக் ஆளும் பாஜகவை திணறடித்து வருகிறது.

கொரோனா ஊரடங்கால் நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் தங்களது வேலையை  இழந்தனர்.  சி.எம்.ஐ.இ.இ அறிக்கையின்படி,  ‘கடந்தாண்டு மார்ச் மாதத்தில்  அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு நடைமுறைக்கு வந்த பிறகு, மாத சம்பள வருவாய் பெற்ற  1.77 பேர் வேலை  இழந்தனர். ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையில் மேலும் பலர் வேலை  இழந்தனர். தற்ேபாது ஊரடங்கு தளர்வுகள் முழுமையாக விலக்கிக் கொள்ளவில்லை  என்றாலும் கூட பொருளாதாரம் மெதுவாக மீண்டு வருவதாகவும், வேலையற்றவர்களுக்கு  வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருவதாகவும் மத்திய அரசு உறுதியளித்து  வருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஐ.எல்.ஓ  அறிக்கையின்படி, ‘உலகளாவிய வேலையின்மை 57 சதவீதமாக உள்ளது. இந்தியாவில்,  வேலையின்மை விகிதம் 47 சதவீதமாக உள்ளது. இந்தியாவின் அண்டை நாடான  பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேசத்தில் வேலையின்மை மிகவும் மோசமாக  உள்ளது. பாகிஸ்தானில் வேலையின்மை விகிதம் 50 சதவீதமும், இலங்கை 51  சதவீதமும், வங்கதேசத்தில் 57 சதவீதமும் உள்ளது. இன்றைய நிலையில் வேலையின்மை  என்பது உலகளாவிய நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளதால், சர்வதேச நாடுகளும்  பெரும் சவால்களை சந்தித்து வருகின்றன. அமெரிக்காவில் புதிய வேலை  வாய்ப்புகள் இல்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் வேலையின்மை அதிகரித்து வருவது குறித்து, சமூக ஊடகங்கள் மூலம் பிரதமர் மோடியிடம் தங்களுக்கு வேலை வேண்டும் என்று பலர்  நேரடியாக கோரிக்கை வைக்கின்றனர். இதற்காக, ‘மோடி ரோஸ்கர் டூ’ (#modi_rojgar_do) என்ற ஹேஷ்டேக் நேற்று முன்தினம் முதல் தேசிய அளவில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இந்த  ஹேஷ்டேக்கில் ஆறு லட்சத்து 74 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டுவிட் செய்து பல்வேறு கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். பாஜக ஆட்சிக்கு வந்தபோது இரண்டு கோடி வேலைகள் வழங்கப்படும்  என்று உறுதியளித்ததில் என்ன நடந்தது? என்று பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்த ஹேஷ்டேக்கை தனது டுவிட்டர் பக்கத்தில் டேக் செய்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ‘சுனோ ஜான் கே மேன்  கி பாத்’ என்று அறிவுறுத்தினார். அதாவது மக்களின் மனதைக் கேளுங்கள் என்று ‘மோடி ரோஸ்கர் டூ’ என்ற ஹேஷ்டேக்கை டேக் செய்துள்ளார். ராகுல்காந்தியும் கருத்து தெரிவித்திருந்ததால், அவரை பின்தொடர்பவர்களும் ‘வேலை கொடுங்கள் மோடி’ என்றும், ‘வெறும் உரைகள் வேண்டாம்; வேலை கொடுங்கள்’ என்றும் பலவாறாக டுவிட் செய்து வருகின்றனர். இது, ஆளும் பாஜகவை திணறவைத்து வருகிறது.

மேலும் சில
  • கோவிஷீல்டு, கோவாக்சினை தொடர்ந்து மேலும் 5 தடுப்பூசிக்கு அனுமதி: மத்திய அரசு வட்டாரங்கள் தகவல்



  • கேரள முதல்வரின் உடல்நிலை திருப்தி



  • 24 மணி நேரத்தில் 1.52 லட்சம் பேருக்கு கொரோனா தினசரி பாதிப்பில் இந்தியா முதலிடம்: தடுப்பூசி திருவிழா தொடங்கியது



  • சித்திரை விஷூ பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறப்பு தினமும் 10 ஆயிரம் பேருக்கு அனுமதி



  • வேகம் எடுக்கும் கொரோனா பரவல்: மோடி இன்று முதல்வர்களுடன் ஆலோசனை: புதிய கட்டுப்பாடுகள் வெளியாக வாய்ப்பு



  • நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கான ஏற்பாடு தொழில் நிறுவனங்களில் 11ம் தேதி முதல் தடுப்பூசி?...கொரோனா வேகமாக பரவுவதால் மத்திய அரசு முடிவு.!!



  • ‘ரெப்போ’ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு



  • 8 மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை: 25 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி?: நாளை மறுநாள் கூட்டத்தில் முக்கிய முடிவு



  • மேற்குவங்கம், அசாமில் வாக்குப்பதிவு விறுவிறு: 8 கட்டமாக தேர்தலை அறிவித்ததில் ‘சதி’: விரைந்து நடத்தி முடிக்க மம்தா வேண்டுகோள்



  • ஒரே நாளில் 1 லட்சம் பேருக்கு கொரோனா: 24 மணி நேரத்தில் 478 பேர் பலி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com