இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

அமமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் 25ல் நடக்கிறது: அதிமுகவை மீட்டெடுக்கும் முயற்சியால் சசிகலா புறக்கணிப்பு

2/22/2021 5:10:28 PM
அமித்ஷா உத்தரவு எதிரொலி: பாஜகவிடம் அதிமுக சரண்: தாமரை சின்னத்தில் போட்டியிட டிடிவிக்கு அழுத்தம் பீகார் பேரவை தேர்தலில் ஒதுங்கியிருந்த நிலையில் அசாமில் பிரியங்கா காந்தி களம் இறங்கியது ஏன்?: மற்ற மாநிலத்திற்கும் வருகிறார்; அதிருப்தி தலைவர்களுக்கு ‘செக்’

சென்னை: பாஜ தலைமையுடன் கூட்டணி பேச்சுவார்த்தை, அதிமுகவை மீட்டெடுக்கும் முயற்சி போன்றவற்றால் அமமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தை சசிகலா புறக்கணித்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் செயற்குழு மற்றும் பொதுக்குழுவை கூட்டி முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், அமமுக கட்சியும் தனது செயற்குழு மற்றும் பொதுக்குழுவை கூட்டியுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சசிகலா தண்டனை காலம் முடிந்து சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது தி.நகரில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து வருகிறார். சிறையில் இருந்து வெளியில் வந்த அவருக்கு அமமுகவினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

அவரது வருகைக்கு பின்பு அதிமுகவை மீட்டெடுப்போம் என்று டிடிவி.தினகரன் கூறி வருகிறார். ஆனாலும் சென்னை வந்த பின்பு சசிகலா யாரையும் சந்திக்கவில்லை. யாருடனும் ஆலோசனை எதுவும் நடத்தவில்லை. இதற்கிடையே, தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் பாஜ கூட்டணியில் சேர தயாராக இருப்பதாகவும், 40 சீட்டுகள் ஒதுக்க வேண்டும் என்றும் சசிகலா தரப்பினர் பாஜ தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் அதிமுக தலைமையோ சசிகலா உடன் இணைந்து தேர்தலை சந்திக்க தயாராக இல்லை என்று உறுதியாக தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது. அதற்கு பிரதமர் மோடியும் ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனாலும் பாஜ கட்சிக்கான தேர்தல் செலவுகள் அனைத்தையும் பார்த்துக் கொள்வதாகவும், கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்றும் தற்போது அமித்ஷாவிடம் சசிகலா தரப்பு பேசி வருவதாக கூறப்படுகிறது.
 
இது தொடர்பாக அதிமுக தலைமையுடன் பேசி வருவதாகவும், இன்னும் அவர்கள் முடிவு அறிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் பாஜ தலைமை என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பது குறித்து சசிகலா தரப்பு எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில், அமமுக பொதுக்குழுவை டிடிவி.தினகரன் கூட்டியுள்ளார். இதில் சசிகலா கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாஜ தலைமை என்ன முடிவெடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு மற்றும் அதிமுகவை மீட்டெடுப்பது உள்ளிட்ட காரணங்களால் இந்த கூட்டத்தை சசிகலா புறக்கணிக்க முடிவெடுத்திருப்பதாக அமமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

இந்த செயற்குழு மற்றும் பொதுக்குழுவில், கட்சியினரின் கருத்துக்களை மட்டும் கேட்க வேண்டும் என்றும், தொகுதிகள் குறித்த எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என்றும் சசிகலா, டிடிவி.தினகரனுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, டிடிவி.தினகரன் கூட்ட உள்ள செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்புள்ளதாக அமமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

இக்கூட்டம் குறித்து, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: அமமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் கட்சியின் துணைத் தலைவரும், முன்னாள் எம்பியுமான அன்பகழகன் தலைமையில் வரும் 25ம் தேதி வியாழக்கிழமை அன்று காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது. கொரோனா கால வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக பின்பற்றி, தமிழகத்தின் 10 இடங்களை காணொளி வாயிலாக இணைத்து நடைபெறும் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்களில் அமமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட ஊர்களில், தங்களுக்கான அழைப்பிதழோடு வந்து கலந்து கொள்ள கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் சில
  • அமித்ஷா உத்தரவு எதிரொலி: பாஜகவிடம் அதிமுக சரண்: தாமரை சின்னத்தில் போட்டியிட டிடிவிக்கு அழுத்தம்



  • சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேர்காணல் இன்று தொடங்கியது: 5 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்பு



  • தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் போட்டியிட விரும்புகிறவர்களிடம் அதிமுக நேர்காணல் நாளை மறுதினம் ஒரே நாளில் நடத்தி முடிக்கப்படுகிறது: தலைமை சார்பில் அறிவிப்பு



  • கூட்டணியில் இருந்து வெளியேறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிமுகவுடன் தேமுதிக இன்று மாலை மீண்டும் பேச்சுவார்த்தை: தேமுதிக கோரிக்கைக்கு செவி சாய்க்கப்படுமா?



  • சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி நாளை அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை



  • கூட்டணியில் சசிகலாவை சேர்க்க தொடர்ந்து எதிர்ப்பு எடப்பாடி மீது அமித்ஷா அதிருப்தி: தொகுதி பங்கீட்டில் சிக்கல்



  • பாளை கல்லூரியில் கலந்துரையாடல் நிகழ்ச்சி அகிம்சை முறையில் நரேந்திர மோடியை நாக்பூருக்கே திருப்பி அனுப்ப வேண்டும்: ராகுல்காந்தி பேச்சு



  • பெண் ஐ.பி.எஸ்க்கு பாலியல் தொல்லை சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மீதான புகார் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றம்: டிஜிபி திரிபாதி உத்தரவு



  • 19 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி சி-51 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது: 14 திட்டங்களை செயல்படுத்த இஸ்ரோ இலக்கு; சிவன் பேட்டி



  • காஞ்சி. கரசங்காலில் ‘ உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சி வீட்டுக்கு விளக்காகவும்; நாட்டுக்கு தொண்டனாகவும் பணியாற்றுவேன்: மு.க.ஸ்டாலின் பேச்சு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com