இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

ரூ6,941 கோடி மதிப்பில் காவிரி-வைகை-குண்டாறு திட்டம்: முதல்வர் அடிக்கல் நாட்டினார்

2/21/2021 6:27:16 PM
அமித்ஷா உத்தரவு எதிரொலி: பாஜகவிடம் அதிமுக சரண்: தாமரை சின்னத்தில் போட்டியிட டிடிவிக்கு அழுத்தம் பீகார் பேரவை தேர்தலில் ஒதுங்கியிருந்த நிலையில் அசாமில் பிரியங்கா காந்தி களம் இறங்கியது ஏன்?: மற்ற மாநிலத்திற்கும் வருகிறார்; அதிருப்தி தலைவர்களுக்கு ‘செக்’

புதுக்கோட்டை: காவிரி வைகை குண்டாறு இணைப்பு திட்ட துவக்க விழா புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், குன்னத்தூரில் இன்று காலை நடைபெற்றது. இத்திட்டத்திற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல்லை நாட்டினார்.
காவிரியில் அதிகமாக வரும் உபரி நீர் கொள்ளிடம் வழியாக கடலில் கலக்கப்பதை தடுத்து அந்த நீரை ஆக்கப்பூர்வமாக விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கு பயன்படுத்த ஏதுவாக அறிவிக்கப்பட்டதே காவிரிகுண்டாறுவைகை இணைப்பு திட்டமாகும். இந்த திட்டம் 2008ம் ஆண்டு அப்போதைய திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. இத்திட்டம் கரூர் மாயனூர் கதவணை துவங்கி வெள்ளாறு, வைகை வரை இணைக்கும் திட்டமாகும்.

இது புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளின் 100 ஆண்டுகால கனவுத் திட்டமாகும். இத்திட்டம் 3 கட்டங்களாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி முதற்கட்டமாக காவிரி முதல் தெற்கு வெள்ளாறு வரை 118.45 கி.மீ., இரண்டாம் கட்டமாக தெற்கு வெள்ளாறு முதல் வைகை வரை 118.45 கி.மீ. முதல் 228.145 கி.மீ. வரை என 109.695 கி.மீ. தூரமும், மூன்றாம் கட்டமாக வைகை முதல் குண்டாறு வரை 228.145 கி.மீ. முதல் 262.19 கி.மீ. வரை என 34.045 கி.மீ தூரம் என மொத்தம் 262.19 கி.மீ. நீளம் வரை இத்திட்டத்தை நிறைவேற்ற திட்டமிடப்பட்டது. இதற்காக மாயனூர் அருகே காவிரி ஆற்றின் குறுகே அப்போது கதவணை கட்டப்பட்டது.

ஆனால் அதோடு இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இத்தனை ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட இந்த திட்டம், சட்டமன்ற தேர்தலை மீண்டும் துவங்கப்படுகிறது. இதன் மொத்த மதிப்பீடு தொகை ₹6,941 கோடி ஆகும். காவிரி முதல் தெற்கு வெள்ளாறு வரை இத்திட்டத்தை செயல்படுத்த இரு கட்டங்களாக மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, அரசாணை பெறப்பட்டுள்ளது. இதன்படி கரூர் மாவட்டத்தில் 4.10 கி.மீ வரை ரூ.171 கோடி மதிப்பீட்டிலும், திருச்சி மாவட்டத்தில் 1.83 கி.மீ நீளமும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 3.525 கி.மீ நீளமும் என மொத்தம் 5.355 கி.மீ நீளத்திற்கு ரூ.160 கோடி மதிப்பீட்டில் கால்வாய் அமைக்கப்பட உள்ளது.

இந்நிலையில், காவிரிவைகை குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு இன்று காலை புதுக்கோட்டையில் நடந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டினார். இவ்விழாவிற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். முன்னதாக மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அனைவரையும் வரவேற்று பேசினார். விழாவில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், கே.டி.ராஜேந்திரபாலாஜி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், க.பாஸ்கரன், எஸ். வளர்மதி, அரசின் தலைமைச் செயலர் ராஜீவ்ரஞ்சன், பொதுப்பணித் துறை செயலர் மணிவாசகன், கலெக்டர் உமாமகேஸ்வரி ஆகியோர் பங்கேற்றனர்.

விழா முடிந்ததும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கரூர் புறப்பட்டார். கரூரில் லைட்ஹவுஸ் கார்னர் பகுதியி–்ல் நிறுவப்பட்டுள்ள 100 அடி உயர கம்பத்தில் கட்சி கொடியை ஏற்றி வைத்து, அண்ணா, எம்ஜிஆர். ஜெயலலிதா சிலைகளை திறந்து வைக்கிறார். பின்னர் மாலை 4.30 மணியளவில் வாங்கலில் நடைபெறும் உழவன் திருவிழா கண்காட்சியில், விவசாய கடன் தள்ளுபடி செய்த முதல்வருக்கு நடைபெறும் பாராட்டு விழாவில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசுகிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நாமக்கல் பிரசாரத்திற்கு செல்கிறார்.

சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் அடிக்கல்
காவிரிவைகைகுண்டாறு நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த சுற்றுச்சூழல் துறை அனுமதி பெற வேண்டும். ஆனால் இதுவரை சுற்றுச்சூழல் அனுமதி பெறாத நிலையில் காவிரிவைகைகுண்டாறு நதிகள் இணைப்பு திட்ட பணிக்கு முதல்வர் பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார்.

மேலும் சில
  • அமித்ஷா உத்தரவு எதிரொலி: பாஜகவிடம் அதிமுக சரண்: தாமரை சின்னத்தில் போட்டியிட டிடிவிக்கு அழுத்தம்



  • சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேர்காணல் இன்று தொடங்கியது: 5 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்பு



  • தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் போட்டியிட விரும்புகிறவர்களிடம் அதிமுக நேர்காணல் நாளை மறுதினம் ஒரே நாளில் நடத்தி முடிக்கப்படுகிறது: தலைமை சார்பில் அறிவிப்பு



  • கூட்டணியில் இருந்து வெளியேறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிமுகவுடன் தேமுதிக இன்று மாலை மீண்டும் பேச்சுவார்த்தை: தேமுதிக கோரிக்கைக்கு செவி சாய்க்கப்படுமா?



  • சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி நாளை அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை



  • கூட்டணியில் சசிகலாவை சேர்க்க தொடர்ந்து எதிர்ப்பு எடப்பாடி மீது அமித்ஷா அதிருப்தி: தொகுதி பங்கீட்டில் சிக்கல்



  • பாளை கல்லூரியில் கலந்துரையாடல் நிகழ்ச்சி அகிம்சை முறையில் நரேந்திர மோடியை நாக்பூருக்கே திருப்பி அனுப்ப வேண்டும்: ராகுல்காந்தி பேச்சு



  • பெண் ஐ.பி.எஸ்க்கு பாலியல் தொல்லை சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மீதான புகார் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றம்: டிஜிபி திரிபாதி உத்தரவு



  • 19 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி சி-51 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது: 14 திட்டங்களை செயல்படுத்த இஸ்ரோ இலக்கு; சிவன் பேட்டி



  • காஞ்சி. கரசங்காலில் ‘ உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சி வீட்டுக்கு விளக்காகவும்; நாட்டுக்கு தொண்டனாகவும் பணியாற்றுவேன்: மு.க.ஸ்டாலின் பேச்சு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com