இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

கொள்ளையடிப்பதிலேயே அதிமுக அரசு கவனம்: தர்மபுரியில் மு.க.ஸ்டாலின் ஆவேசம்

1/18/2021 5:12:51 PM
அமித்ஷா உத்தரவு எதிரொலி: பாஜகவிடம் அதிமுக சரண்: தாமரை சின்னத்தில் போட்டியிட டிடிவிக்கு அழுத்தம் பீகார் பேரவை தேர்தலில் ஒதுங்கியிருந்த நிலையில் அசாமில் பிரியங்கா காந்தி களம் இறங்கியது ஏன்?: மற்ற மாநிலத்திற்கும் வருகிறார்; அதிருப்தி தலைவர்களுக்கு ‘செக்’

தர்மபுரி: 10 ஆண்டாக கொள்ளையடிப்பதிலேயே அதிமுக அரசு கவனம் செலுத்தியுள்ளது. இன்னும் 4 மாதத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். அதற்கு மக்கள் தயாராக வந்திருப்பதை உணர முடிகிறது என தர்மபுரி மாவட்டம் தூள்செட்டிஏரி மக்கள் கிராம சபை கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். தமிழகத்தில் கிராம பகுதிகளில் மக்களின் குறைகளை கேட்கும் வகையில் மக்கள் கிராம சபை கூட்டத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடத்தி வருகிறார். இக்கூட்டம், அதிமுகவை நிராகரிப்போம் என்ற முழக்கத்தோடு நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதிக்குட்பட்ட தூள்செட்டி ஏரி பகுதியில் இன்று காலை மக்கள் கிராம சபை கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதில் பங்கேற்பதற்காக, சென்னையில் இருந்து கிருஷ்ணகிரிக்கு நேற்றிரவு மு.க.ஸ்டாலின் வந்தார். அவருக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் கந்திகுப்பம் கிராமத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து இன்று காலை மேற்கு மாவட்ட வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராயக்கோட்டைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்றார். அங்கு மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பிரகாஷ் எம்எல்ஏ, வேப்பனஹள்ளி எம்எல்ஏ முருகன், ஓசூர் எம்எல்ஏ சத்யா ஆகியோர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதையடுத்து அங்கு திறந்தவேனில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது, இன்னும் நான்கு மாதங்கள் மட்டுமே உள்ளது.

அதுவரை காத்திருங்கள் என்றார். மேலும் நாங்கள் ரெடி நீங்கள் ரெடியா என கேள்வி எழுப்பினார். இதையடுத்து அங்கிருந்து புறப்பட்ட மு.க.ஸ்டாலின் சுமார் 10.30 மணியளவில் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதிக்குட்பட்ட தூள்செட்டி ஏரிப்பகுதிக்கு வந்தார். அங்கு மக்கள் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டு, அங்கு திரண்டிருந்த கிராம மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: திமுக நடத்தும் மக்கள் கிராம சபை கூட்டத்தில் ஏராளமானோர் திரண்டு இருக்கிறீர்கள். உங்கள் பகுதியில் கழிவுநீர் கால்வாய், குடிநீர் பிரச்னை, சாலை பிரச்னை, பட்டா பிரச்னை உள்ளிட்டவை இருக்கிறது. அதையெல்லாம் உங்களது பிரதிநிதிகளாக 10 பேர் பேசவுள்ளனர். இந்த கூட்டத்தை பார்க்கும் போது, உங்களுக்கே ஒரு வித நம்பிக்கை வந்திருக்கும்.

கடந்த 10 ஆண்டுகளாக அதிமுகவின் அக்கிரம ஆட்சி, அநியாய ஆட்சி நடக்கிறது. இதனால் எந்த பலனும் மக்களுக்கு கிடைக்கவில்லை. கலைஞர் கருணாநிதி ஆட்சியில் என்னென்ன திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது என்பதை நான் சொல்ல வேண்டியது இல்லை. உங்களுக்கே தெரியும். எல்லா திட்டங்களையும் நீங்களே அனுபவித்துள்ளீர்கள். எதையுமே செய்யாத இந்த அதிமுக ஆட்சி, பதவியில் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும் என்பதற்காக நடக்கிறது. 10 ஆண்டுகளாக கொள்ளையடிக்க, ஊழல் செய்யும் ஆட்சியாக இருக்கிறது. இன்னும் 4 மாதம் தான் உள்ளது. எதற்கு, ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு. அதை செய்ய நாங்க ரெடி.. நீங்க ரெடியா... உங்களது எண்ணங்கள் புரிகிறது. அதனால் தான், குடும்பம் குடும்பமாக வந்துள்ளீர்கள். இன்னும் 4 மாதத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். இவ்வாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

மேலும் சில
  • அமித்ஷா உத்தரவு எதிரொலி: பாஜகவிடம் அதிமுக சரண்: தாமரை சின்னத்தில் போட்டியிட டிடிவிக்கு அழுத்தம்



  • சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேர்காணல் இன்று தொடங்கியது: 5 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்பு



  • தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் போட்டியிட விரும்புகிறவர்களிடம் அதிமுக நேர்காணல் நாளை மறுதினம் ஒரே நாளில் நடத்தி முடிக்கப்படுகிறது: தலைமை சார்பில் அறிவிப்பு



  • கூட்டணியில் இருந்து வெளியேறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிமுகவுடன் தேமுதிக இன்று மாலை மீண்டும் பேச்சுவார்த்தை: தேமுதிக கோரிக்கைக்கு செவி சாய்க்கப்படுமா?



  • சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி நாளை அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை



  • கூட்டணியில் சசிகலாவை சேர்க்க தொடர்ந்து எதிர்ப்பு எடப்பாடி மீது அமித்ஷா அதிருப்தி: தொகுதி பங்கீட்டில் சிக்கல்



  • பாளை கல்லூரியில் கலந்துரையாடல் நிகழ்ச்சி அகிம்சை முறையில் நரேந்திர மோடியை நாக்பூருக்கே திருப்பி அனுப்ப வேண்டும்: ராகுல்காந்தி பேச்சு



  • பெண் ஐ.பி.எஸ்க்கு பாலியல் தொல்லை சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மீதான புகார் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றம்: டிஜிபி திரிபாதி உத்தரவு



  • 19 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி சி-51 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது: 14 திட்டங்களை செயல்படுத்த இஸ்ரோ இலக்கு; சிவன் பேட்டி



  • காஞ்சி. கரசங்காலில் ‘ உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சி வீட்டுக்கு விளக்காகவும்; நாட்டுக்கு தொண்டனாகவும் பணியாற்றுவேன்: மு.க.ஸ்டாலின் பேச்சு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com