இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

சட்டமன்ற தேர்தலில் போட்டியிட சீட் கிடைப்பதில் சிக்கல் அதிமுகவில் இருந்து பாஜவுக்கு தாவியவர்கள் கலக்கம்: கன்னியாகுமரி இடைத்தேர்தலில் அதிமுகவே போட்டியிட திட்டம்

1/16/2021 5:18:42 PM
அமித்ஷா உத்தரவு எதிரொலி: பாஜகவிடம் அதிமுக சரண்: தாமரை சின்னத்தில் போட்டியிட டிடிவிக்கு அழுத்தம் பீகார் பேரவை தேர்தலில் ஒதுங்கியிருந்த நிலையில் அசாமில் பிரியங்கா காந்தி களம் இறங்கியது ஏன்?: மற்ற மாநிலத்திற்கும் வருகிறார்; அதிருப்தி தலைவர்களுக்கு ‘செக்’

சென்னை: தமிழகத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில், அதிமுகவில் இருந்து பாஜவுக்கு தாவியவர்களுக்கு போட்டியிட இடம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதேபோன்று, கன்னியாகுமரி எம்பி தொகுதிக்கான இடைத்தேர்தலில் அதிமுகவே போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதால் பாஜவுக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தமிழகத்தில் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ளதால் திமுக, அதிமுக கட்சி தலைவர்கள் பிரசாரத்தை தொடங்கி உள்ளனர். கூட்டணி குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

குறிப்பாக, கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணியில் இருந்த பாமக, பாஜ, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளே மீண்டும் கூட்டணியில் சேர அதிக வாய்ப்புள்ளது. ஆனாலும் இந்த கூட்டணியை இறுதி செய்வதில் அதிமுக தலைமைக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. காரணம், பாஜ, பாமக, தேமுதிக கட்சி தலைமை அதிமுக கூட்டணியில் அதிக சீட்களை பெற பல்வேறு நாடகங்களை அரங்கேற்றி வருகிறது. மேலும், 2021ம் ஆண்டு தேர்தலில் எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இந்த கட்சிகள் தயக்கம் காட்டி வருகிறது. அதேநேரம், எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளும் கட்சிகளுடன்தான் கூட்டணி வைத்துக் கொள்வோம் என்று அதிமுக முன்னணி தலைவர்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

 இதனால், சென்னையில் நடைபெற்ற தேர்தல் பிரசார தொடக்க கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் யாரும் கலந்து கொள்ளாததால் அதிமுக தலைமை ஏமாற்றம் அடைந்துள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், பாஜ தலைவர்கள் தமிழகத்தில் சில குறிப்பிட்ட தொகுதிகளை மேற்கோள் காட்டி, இந்த தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று மறைமுகமாக டெல்லி தலைமை மூலம் நெருக்கடி கொடுத்து வருகிறது. அகில இந்திய பாஜ தலைவர் ஜே.பி.நட்டா இரண்டு நாட்களுக்கு முன் சென்னை வந்தபோது, தமிழகத்தில் பாஜவுக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று கூறிவிட்டு சென்றுள்ளார்.

தமிழகத்தில் பாஜ வளர்ச்சி அடைவதாக நினைத்து, அதிமுக அதிருப்தி தலைவர்கள் சிலர் கடந்த சில மாதங்களாக தமிழக பாஜகவில் இணைந்து வருகிறார்கள். இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரனும் ஒருவர். இவருக்கு பாஜ தலைவர் பதவி கிடைக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் கிடைக்கவில்லை. அதேபோன்று வேலூர் மாநகராட்சி முன்னாள் அதிமுக மேயர் கார்த்திகாயினி உள்ளிட்டோரும் பாஜவில் இணைந்துள்ளனர். அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தவர்களுக்கு வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், இவர்களுக்கு பாஜவில் போட்டியிட வாய்ப்பு வழங்க கூடாது என்று அதிமுக மாவட்ட தலைவர்கள் சிலர் போர்க்கொடி தூக்கி உள்ளனர். குறிப்பாக நயினார் நாகேந்திரனுக்கு எதிராக நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் கணேசராஜா அல்லது அமைப்பு செயலாளர் சுதா பரமசிவம் நெல்லை மாவட்டத்தில் அதிமுக சார்பில் போட்டியிட முடிவு செய்துள்ளனர்.

அதேநேரம் பாஜ சார்பில் நயினார் நாகேந்திரன் முன்னிறுத்தப்பட்டால், அந்த தொகுதி தங்களுக்கு கிடைக்காமல் போகும் என்று கட்சி மேலிடத்துக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். இதனால் அதிமுக - பாஜ இடையே நெல்ைல மாவட்டத்தில் சீட் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக அதிமுக தொண்டர்கள் கருதுகிறார்கள். இதேபோன்று, பல்வேறு கட்சியில் இருந்து பாஜகவுக்கு தாவியர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தால், ஏற்கனவே அவர்கள் இருந்த கட்சி சார்பில் முக்கிய பிரமுகர்கள் தங்களுடைய வாய்ப்பு பறிபோகும் என்று கருதுகிறார்கள். இதனால் ஒவ்வொரு மாவட்டத்திலும் செல்வாக்கு இல்லாத பாஜகவினர் கேட்கும் தொகுதிகளையே கொடுக்க மாவட்டச் செயலாளர்கள், கட்சித் தலைமையிடம் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

அதையும் மீறி சீட் கொடுத்தால், அதிமுகவில் சில அதிருப்தி தலைவர்களை தனியாக களம் இறக்கவும் மாவட்ட செயலாளர்கள் முடிவு செய்துள்ளார்களாம். இதனால், ஏற்படும் கோஷ்டி மோதல் காரணமாக பாஜவுக்கு ஓட்டு கிடைக்காமல் போகலாம். இதனால், பாஜ கட்சி தலைமையில், கட்சி தாவியவர்களுக்கு சீட் வழங்குவது குறித்து யோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. தற்போது கன்னியாகுமரி எம்பி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற எச்.வசந்தகுமார் மரணம் அடைந்ததால் அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் ஏற்கனவே, பாஜ சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தற்போது அங்கு வரும் சட்டமன்ற தேர்தலுடன் எம்பி தேர்தலுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இந்த தொகுதியை மீண்டும் பாஜகவுக்கு ஒதுக்க அதிமுக தயக்கம் காட்டி வருகிறது. கன்னியாகுமரி இடைத்தேர்தலில், அதிமுக சார்பில் தமிழக டெல்லி பிரதிநிதியாக உள்ள தளவாய்சுந்தரம் போட்டியிட விருப்பம் தெரிவித்து, கட்சி தலைமையிடம் கோரிக்கை வைத்துள்ளார். இதனால், பாஜ - அதிமுக இடையே கூட்டணியில் சிக்கல் ஏற்படும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள் வருகின்ற நாளில் அதிமுக - பாஜ கூட்டணியில் அரங்கேற அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் அதிமுக தொண்டர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

மேலும் சில
  • அமித்ஷா உத்தரவு எதிரொலி: பாஜகவிடம் அதிமுக சரண்: தாமரை சின்னத்தில் போட்டியிட டிடிவிக்கு அழுத்தம்



  • சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேர்காணல் இன்று தொடங்கியது: 5 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்பு



  • தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் போட்டியிட விரும்புகிறவர்களிடம் அதிமுக நேர்காணல் நாளை மறுதினம் ஒரே நாளில் நடத்தி முடிக்கப்படுகிறது: தலைமை சார்பில் அறிவிப்பு



  • கூட்டணியில் இருந்து வெளியேறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிமுகவுடன் தேமுதிக இன்று மாலை மீண்டும் பேச்சுவார்த்தை: தேமுதிக கோரிக்கைக்கு செவி சாய்க்கப்படுமா?



  • சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி நாளை அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை



  • கூட்டணியில் சசிகலாவை சேர்க்க தொடர்ந்து எதிர்ப்பு எடப்பாடி மீது அமித்ஷா அதிருப்தி: தொகுதி பங்கீட்டில் சிக்கல்



  • பாளை கல்லூரியில் கலந்துரையாடல் நிகழ்ச்சி அகிம்சை முறையில் நரேந்திர மோடியை நாக்பூருக்கே திருப்பி அனுப்ப வேண்டும்: ராகுல்காந்தி பேச்சு



  • பெண் ஐ.பி.எஸ்க்கு பாலியல் தொல்லை சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மீதான புகார் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றம்: டிஜிபி திரிபாதி உத்தரவு



  • 19 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி சி-51 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது: 14 திட்டங்களை செயல்படுத்த இஸ்ரோ இலக்கு; சிவன் பேட்டி



  • காஞ்சி. கரசங்காலில் ‘ உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சி வீட்டுக்கு விளக்காகவும்; நாட்டுக்கு தொண்டனாகவும் பணியாற்றுவேன்: மு.க.ஸ்டாலின் பேச்சு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com