இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

ரூ. 971 கோடி மதிப்பில் புதிய நாடாளுமன்றம் கட்ட அனுமதி: சுப்ரீம் கோர்ட்டின் 3 நீதிபதிகளில் ஒருவர் மாறுபட்ட தீர்ப்பு

1/5/2021 5:37:29 PM
பெல்ஜியத்திற்கு ஒரு விலை... இந்தியாவிற்கு வேறு விலை... ஏழைகளுக்கு எப்போது இலவச தடுப்பூசி கிடைக்கும்?.. மத்திய அரசுக்கு காங். செய்தி தொடர்பாளர் கேள்வி கொள்ளையடிப்பதிலேயே அதிமுக அரசு கவனம்: தர்மபுரியில் மு.க.ஸ்டாலின் ஆவேசம்

புதுடெல்லி: மத்திய அரசின் சார்பில் ரூ.971 கோடி மதிப்பில் புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கான ‘சென்ட்ரல் விஸ்டா’ திட்டத்தை செயல்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதில், உச்சநீதிமன்றத்தின் 3 நீதிபதிகளில் ஒருவர் மாறுபட்ட தீர்ப்பு  அளித்துள்ளார்.டெல்லியில் நாடாளுமன்றம் செயல்பட்டு வரும் தற்போதைய கட்டிடம் 93 ஆண்டுகள் பழமையானது. இந்தக் கட்டிடத்தை இடிக்காமல் அதனையொட்டிய பகுதியில் புதிய நாடாளுமன்றம் கட்டப்பட உள்ளது. இதற்காக ‘சென்ட்ரல் விஸ்டா’ என்ற  திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியது. இந்தத் திட்டத்தின் கீழ் புதிய நாடாளுமன்றக் கட்டிடம், மத்திய தலைமைச் செயலகம் ஆகியவை கட்டப்பட உள்ளன. இத்திட்டத்தின் மதிப்பு ரூ.971 கோடியாகும். 21 மாதங்களில் அதாவது 2022ம் ஆண்டு  ஆகஸ்ட் மாதத்துக்குள் 75வது சுதந்திர தினம் கொண்டாடுவதற்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டது.

முக்கோண வடிவத்தில் 42 மீட்டர் உயரம் கொண்ட புதிய கட்டிடத்தில் தரைத்தளம் மற்றும் 3 தளங்கள் கட்டப்படும். இதற்கிடையே மத்திய அரசின் விஸ்டா திட்டத்துக்கு எதிராகப் பல்வேறு கேள்விகளை எழுப்பி ராஜீவ் சூரி உள்ளிட்ட சிலர்  சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. இதனை கடந்த சில நாட்களுக்கு முன் விசாரித்த உச்சநீதிமன்றம், ‘டெல்லியில் புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கான மத்திய அரசின் மத்திய விஸ்டா திட்டத்துக்கு  எந்தவிதமான தடையும் இல்லை; புதிய நாடாளுமன்றத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியை மத்திய அரசு நடத்தலாம்’ என்று அனுமதியளித்தது.

மேலும், ‘மத்திய விஸ்டா திட்டத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான முடிவை எடுக்கும் வரை, எவ்விதமான கட்டுமானத்தையும் இடிக்கமாட்டோம். கட்டுமானம் ஏதும் கட்டப்படாது’ என்று மத்திய அரசு உறுதியளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கான பூமி பூஜை கடந்த டிச. 10ம் தேதி நடைபெற்றது. பிரதமர் மோடி பங்கேற்று புதிய நாடாளுமன்றம்  கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டினார்.

இவ்வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்டு நிலையில், இன்று ‘சென்ட்ரல் விஸ்டா’ திட்டம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதி ஏ.எம்.கான்வில்கர், மற்ற  நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி மற்றும் சஞ்சீவ் கன்னா ஆகியோர் அளித்த தீர்ப்பில், ‘புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. எவ்வித தடையும் இல்லை. காற்று மாசுப்படுவதை தடுக்க செயற்கை கோபுரங்கள்  அமைக்க வேண்டும். நாட்டின் புராதன சின்னங்களை நிர்வகிக்கும் அமைப்பிடம் முறையான அனுமதி பெற வேண்டும். திட்டத்தை நடைமுறைப்படுத்தும் முன், சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்னைகளை சரிசெய்ய வேண்டும்’ என்று அறிவித்தனர்.

ஆனால், மூன்று நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி சஞ்சீவ் கன்னா அளித்த தீர்ப்பில், ‘இத்திட்டத்தை நிறைவேற்ற சுற்றுச்சூழல் தொடர்பான சந்தேகங்களை எப்படி சரிசெய்ய முடியும்? அதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளனவா?’ என்று கேள்வி  எழுப்பினார். தீர்ப்பில் இவரது கருத்து முக்கியதுவமாக பார்க்கப்பட்டாலும், புதிய நாடாளுமன்றம் கட்டும் திட்டத்தை கட்டுவதற்கு இவர் எவ்வித தடையும் விதிக்கவில்லை. மேலும், தனது சந்தேகங்களை வெளிப்படுத்தி உள்ளதால், 3ல் 2 நீதிபதிகள் ஒருமித்த கருத்தை தெரிவித்ததின் அடிப்படையிலும், பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்ப்பின்படி, புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கு எவ்வித தடையும்  விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்றம் கட்ட உச்சநீதிமன்றமே அனுமதி அளித்துள்ளதால், விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில
  • பெல்ஜியத்திற்கு ஒரு விலை... இந்தியாவிற்கு வேறு விலை... ஏழைகளுக்கு எப்போது இலவச தடுப்பூசி கிடைக்கும்?.. மத்திய அரசுக்கு காங். செய்தி தொடர்பாளர் கேள்வி



  • 11 மாநிலத்தில் பறவை காய்ச்சல் பீதி இருக்கும் நிலையில் கறிக்கோழி விற்பனைக்கு தடை விதிக்க கூடாது: மாநிலங்களுக்கு மத்திய அரசு திடீர் உத்தரவு



  • கடன் வாங்கிய வழக்கை மூடி மறைக்க ரூ.10 லட்சம் லஞ்சம் சிபிஐ இன்ஸ்பெக்டர், ஸ்டெனோகிராபர் சஸ்பெண்ட்: 2 டிஎஸ்பிக்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை



  • கோயில்களை சேதப்படுத்திய பாதிரியார் அதிரடி கைது : பரபரப்பு வாக்குமூலம்



  • தமிழகம் உட்பட 5 மாநில பேரவை தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக தேர்தல் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தடை: மாநில அரசுகளுக்கு கமிஷன் கிடுக்கிபிடி உத்தரவு



  • வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக பேசிய 4 பேர் குழுவிடம் விவசாயிகளுக்கு நீதி கிடைக்காது: காங். செய்தி தொடர்பாளர் காட்டம்



  • புனேவில் இருந்து முதல் கட்டமாக 5.56 லட்சம் கொரோனா தடுப்பு மருந்து சென்னை வந்தது: இன்று மாலை மாவட்டங்களுக்கு அனுப்பி வைப்பு



  • பிப். 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல்; ‘அல்வா’ நிகழ்ச்சி, பிரிண்ட் ஆவணம் கிடையாது: மத்திய நிதியமைச்சக வட்டாரம் தகவல்



  • டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக 15ம் தேதி காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம்: ஆளுநர் மாளிகைகளை முற்றுகையிட உள்ளதாக அறிவிப்பு



  • 15ம் தேதி 9ம் கட்ட பேச்சுவார்த்தை வேளாண் சட்டத்தை திரும்ப பெற்றால் மட்டுமே வீடு திரும்புவோம்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com