இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

நாடாளுமன்ற வரலாற்றில் 2020ம் ஆண்டில் 33 நாட்கள் மட்டுமே நடந்த கூட்டத்தொடர்: கொரோனா அச்சத்தால் பணிகள் முடக்கம்

1/2/2021 5:20:53 PM
திமுகவுடன் பேச்சுவார்த்தையில் உடன்பாடு காங்கிரசுக்கு 25 தொகுதி ஒதுக்கீடு கன்னியாகுமரி எம்.பி. தொகுதியிலும் போட்டி மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து மதத்தை வைத்து பிரிவினையை ஏற்படுத்துகிறது இந்தியாவை காப்பாற்ற பாஜவை தோற்கடியுங்கள்: சீதாராம் யெச்சூரி ஆவேச பேச்சு

புதுடெல்லி: கொரோனா தொற்று அச்சத்தால் நாடாளுமன்ற வரலாற்றில் கடந்தாண்டு 33 நாட்கள் மட்டுமே பட்ஜெட், மழைக்கால கூட்டத்தொடர் நடந்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 2020ம் ஆண்டில் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரும், மழைக்காலக் கூட்டத்தொடரும் திட்டமிட்ட நாட்களில் நடக்கவில்லை. கிட்டதிட்ட 31 நாட்கள் பட்ஜெட் கூட்டத்தொடர் நடத்த திட்டமிடப்பட்ட நிலையில் 23 நாட்கள் மட்டுமே நடந்தது. மழைக்காலக் கூட்டத்தொடரும் 18 அமர்வுகள் நடத்த முடிவு செய்யப்பட்ட நிலையில், 10 நாட்களோடு அவை ஒத்திவைக்கப்பட்டது. இதனால் 2020ம் ஆண்டில் மாநிலங்களவை 33 நாட்கள் மட்டுமே நடந்துள்ளது. மக்களவை 50 நாட்களுக்கும் குறைவாக நடந்துள்ளது.

குறைந்த நாட்கள் பட்டியலின்படி பார்த்தால், கடந்த 1999ம் ஆண்டில் 48 நாட்கள், 2004 மற்றும் 2008ம் ஆண்டில் தலா 46 நாட்கள் நடந்துள்ளன. கடந்தாண்டு 33 நாட்கள் நடந்தது தான், நாடாளுமன்ற வரலாற்றிலேயே மிகக்குறைவு. கடைசியாக 1984ம் ஆண்டில் குளிர்காலக் கூட்டத் தொடர் ரத்து செய்யப்பட்டது. அதன்பின் 2020ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. ஒட்டுமொத்த நாடாளுமன்ற வரலாற்றை பார்த்தால், 1979 மற்றும் 1975ம் ஆண்டுகளில் குளிர்காலக் கூட்டத் தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மாநிலங்களவைச் செயலாளர் ஆய்வக புள்ளிவிபரப்படி, கடந்த 2020ம் ஆண்டில் மாநிலங்களவை 33 நாட்கள் மட்டுமே செயல்பட்டாலும், மசோதாக்களை அதிகமாக நிறைவேற்றி 82.7 சதவீதம் ஆக்கப்பூர்வமாகச் செயல்பட்டுள்ளது. 2020ம் ஆண்டில் மாநிலங்களவையில் 39 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில் வேளாண் மசோதா உட்பட 12 மசோதாக்கள் பட்ஜெட் கூட்டத்தொடரிலும், 27 மசோதாக்கள் மழைக்காலக் கூட்டத்தொடரிலும் நிறைவேற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில
  • எனது பாட்டி இந்திராகாந்தி செய்தது தவறுதான்; எதிர்கட்சிகள் அதிகாரத்துக்கு போராடவில்லை; இந்தியாவுக்காக போராடுகிறது: ராகுல்காந்தியின் ஆவேச உரையாடல்



  • பீகார் பேரவை தேர்தலில் ஒதுங்கியிருந்த நிலையில் அசாமில் பிரியங்கா காந்தி களம் இறங்கியது ஏன்?: மற்ற மாநிலத்திற்கும் வருகிறார்; அதிருப்தி தலைவர்களுக்கு ‘செக்’



  • சமூக ஊடகங்களுக்கான புதிய வழிகாட்டல் விதிகள் எதிரொலி 5 மாநில தேர்தலில் அமல்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு : சட்ட விதிகளை ஆராய தனி அதிகாரி நியமனம்



  • உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் பிரதமர் மோடி நாளை புதுச்சேரி வருகை: அரசு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்



  • கேரள சட்டமன்ற தேர்தல் காங். கூட்டணி பெரும்பான்மை இடங்களை பெறும்: ராகுல்காந்தி நம்பிக்கை



  • உரைகள் வேண்டாம்; வேலை கொடுங்கள்: பாஜகவை திணறடிக்கும் ‘மோடி ரோஜ்கர் டூ’



  • தமிழகம் உட்பட 5 மாநில பேரவை தேர்தல்; 25ம் தேதி அட்டவணை வெளியீடு?.. நாளை மறுநாள் அதிகாரிகள் ஆலோசனை



  • காஷ்மீர் தீவிரவாதிகளிடம் இருந்து சீன துப்பாக்கி, வெடிகுண்டு பறிமுதல்



  • 16 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில் இந்தியா-சீனா உடன்பாடு: எல்லையில் இருந்து படைகளை வாபஸ் பெற உடனடி நடவடிக்கை



  • 22ம் தேதி மெஜாரிட்டியை நிரூபிக்க கவர்னர் கெடு: ஆட்சியை காப்பாற்ற நாராயணசாமி தீவிரம்: சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com