இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

உலகம்

4 விண்வெளி வீரர்களுடன் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் விண்ணில் பாய்ந்தது

11/16/2020 5:08:12 PM
234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட டிடிவி.தினகரன் முடிவு அரசியலில் இருந்து சசிகலா விலகல் ஏன்?: பரபரப்பு தகவல்கள்

வாஷிங்டன்: நாசாவை சேர்ந்த 4 விண்வெளி வீரர்களுடன் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் அமெரிக்காவில் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று அதிகாலை 5.57 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. அமெரிக்காவின் கொலம்பியா ராக்கெட், 2003ம் ஆண்டு வெடித்த காரணத்தால் நாசா, தனியார் நிறுவனமான எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் வீரர்களை விண்ணுக்கு அனுப்பி வருகிறது. அந்த வகையில் நாசாவின் 2 விண்வெளி வீரர்களுடன் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபல்கான் 9 ராக்கெட் சோதனை ஓட்டமாக வெற்றிகரமாக கடந்த மே மாதம் விண்ணில் ஏவப்பட்டது. இதன் மூலம் விண்ணுக்கு மனிதர்களை பத்திரமாக அனுப்பி திரும்பி கொண்டு வர முடியும் என்ற சோதனை ஓட்டத்தில் வெற்றி கண்டது.

இதையடுத்து இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5.57 மணிக்கு நாசாவின் 4 விண்வெளி வீரர்களுடன் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு சென்றது. ஸ்பேஸ் எக்ஸ் தயாரித்துள்ள இந்த விண்கலத்தின் பெயர் டிராகன். இதை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் துணை தலைவர் மைக் பென்ஸ் மற்றும் கரேன் பென்ஸ் தொடங்கி வைத்தனர். இந்த விண்கலத்தில் மைக்கேல் ஹாப்கின்ஸ், விக்டர் குளோவர், ஷன்னான் வாக்கர் ஆகிய 3 அமெரிக்கர்களும் சோய்சி நொகுச்சி என்ற ஜப்பான் வீரரும் பயணம் செய்தனர். இவர்களில் க்ளோவர் என்பவர் மட்டுமே நடுத்தர வயதுக்காரர். மற்ற 3 வீரர்கள் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள். ரெசிலியன்ஸ் எனப்படும் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் சர்வதேச விண்வெளி மையத்திற்கு இந்திய நேரப்படி நாளை அதிகாலை 4 மணிக்கு சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு செல்லும்.

இந்த 4 பேரும் ஏற்கனவே அங்கிருக்கும் 2 ரஷ்யர்கள், ஒரு அமெரிக்கர் ஆகியோருடன் 6 மாதங்கள் தங்கி ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்கள். க்ரூ டிராகன் ரெசிலியன்ஸ் என்ற விண்கலம் நாசாவால் அங்கீகரிக்கப்பட்ட முதல் விண்கலமாகும். ராக்கெட்டில் இருந்து விண்கலம் தனியாக பிரிந்து பயணிக்க தொடங்கியதும், ராக்கெட் பூஸ்டர் பூமிக்குத் திரும்பி, கடலில் ஒரு கப்பலில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதனை மறுபடியும் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பிடன் ட்விட்டர் பதிவில், அறிவியலின் ஆற்றலுக்கும், நமது புதுமை, புத்தி கூர்மை மற்றும் உறுதியை பயன்படுத்துவதன் மூலம் எங்களால் சாதிக்க முடியும்’ என்று பாராட்டினார். அதே நேரத்தில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அதை ”பெரியது” என்றார்.

மேலும் சில
  • ‘நாசா’ அனுப்பிய விண்கலம் செவ்வாய்கிரகத்தில் தரையிறங்கியது



  • தெற்கு பசிபிக் கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ஆஸ்திரேலியா, நியூசிலாந்துக்கு சுனாமி எச்சரிக்கை



  • வாஷிங்டனில் கோலாகல விழா ‘அரசியலமைப்பு, ஜனநாயகத்தை பாதுகாப்பேன்’.. அதிபராக பதவியேற்ற பின் ஜோ பிடன் உரை



  • வன்முறையை தூண்டும் பதிவுகளால் டிரம்பின் டுவிட்டர் கணக்கு நிரந்தர முடக்கம்: பேஸ்புக் நிறுவனம் மீண்டும் எச்சரிக்கை



  • புதிய ஆட்சி அமைய ஒத்துழைப்பதாக டிரம்ப் அறிவிப்பு: தேர்தல் சட்டங்களை திருத்த வலியுறுத்தல்



  • அமெரிக்க வெள்ளை மாளிகை முன்பு டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறை; துப்பாக்கி சூடு: 4 பேர் பலி



  • இங்கிலாந்தில் மீண்டும் ஊரடங்கு: பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு



  • தடுப்பூசி போட்டுக் கொண்ட கமலா ஹாரிஸ்



  • ஜோ பிடன், நெதன்யாகுவை தொடர்ந்து தடுப்பூசி முதல் ‘டோஸ்’ போட்டு கொண்ட சவுதி இளவரசர்



  • அமெரிக்க-இந்திய உறவை மேம்படுத்தியதற்காக மோடிக்கு ‘லெஜியன் ஆப் மெரிட்’ விருது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com