அபுதாபியில் எலிமினேட்டர் போட்டி ஐதராபாத்-பெங்களூரு இன்று பலப்பரீட்சை
11/6/2020 5:31:05 PM
அபுதாபி: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அபுதாபியில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் எலிமினேட்டர் போட்டியில் பட்டியலில் முறையே 3 மற்றும் 4வது இடம் பிடித்த சன்ரைசர்ஸ் ஐதராபாத்-பெங்களூரு அணிகள் மோதுகின்றன. ஐதராபாத் கடைசி 3 போட்டியில் டெல்லி, பெங்களூரு, மும்பையை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது. அதே வெற்றி பார்முடன் களம் இறங்குகிறது. வார்னர் 529, சகா 4 போட்டியில் 214, மணிஷ்பாண்டே 380 ரன் எடுத்துள்ளனர். பந்துவீச்சில் ரஷித்கான் 19, சந்தீப் சர்மா 13, டி.நடராஜன் 14 விக்கெட் எடுத்துள்ளனர்.
மறுபுறம் பெங்களூரு அணியின் கேப்டன் கோஹ்லி 460, டிவில்லியர்ஸ் 398, தேவ்தத் படிக்கல்472 ரன் எடுத்துள்ளனர்.
பேட்டிங்கில் இவர்கள் 3 பேரையும் தான் நம்பி உள்ளது. பந்துவீச்சில் சாஹலை தவிர யாரும் பெரிதாக சாதிக்கவில்லை. வாஷிங்டன் சுந்தர் சிக்கனமாக பந்துவீசினாலும் விக்கெட் எடுக்க முடியவில்லை. கடைசி 3 போட்டிகளிலும் (மும்பை, ஐதராபாத், டெல்லிக்கு எதிராக) தோல்வி கண்டுள்ள பெங்களூரு நெருக்கடியுடன் களம் இறங்குகிறது. இன்று வெற்றிபெறும் அணி நாளை மறுநாள் டெல்லியுடன் குவாலிபயர் 2வது போட்டிகளில் மோதும். தோல்வி அடையும் அணி நடையை கட்டவேண்டியதுதான். சன் ரைசர்ஸ் ஆதிக்கம் இரு அணிகளும் இதுவரை 17 போட்டிகளில் நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் 9ல் ஐதராபாத், 7ல் பெங்களூரு வென்றுள்ளது. ஒரு போட்டி கைவிடப்பட்டுள்ளது. நடப்பு சீசனில் முதல் போட்டியில் 10 ரன் வித்தியாசத்தில் பெங்களூருவும், 2வது போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தும் வெற்றி பெற்றுள்ளன.