காங்கிரஸ் பிரமுகர் கொலை 4 பேருக்கு போலீஸ் வலை
9/8/2020 6:28:24 PM
புதுச்சேரி: புதுச்சேரி, சின்னையாபுரம், சின்னகிணத்து வீதியைச் சேர்ந்தவர் கணேசன் (54). காங்கிரஸ் பிரமுகரான இவர், கதர்வாரியத்தில் நிர்வாகியாகவும் பணியாற்றினார். நேற்று மாலை துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அவர் வாழைகுளம், பழனி கிராமணி தோட்டம் அருகே வந்தபோது அவரை வழி மறித்த ஒரு கும்பல், சரமாரியாக வெட்டி கொன்று விட்டு தப்பியது.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து, வாழைகுளம் வெங்கடேசன் (28), அரவிந்த் (27), கட்ட செந்தில் (30), அஜய் (28) ஆகியோரை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.இந்நிலையில் இன்று 2 பேர் தனிப்படை போலீசாரிடம் சிக்கியுள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.