நடிகை ராகினி திவேதி கைது: போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் போலீஸ் நடவடிக்கை
9/4/2020 2:43:26 PM
பெங்களூரு: போதை கும்பலுடன் ெதாடர்புடைய வழக்கில் கன்னட நடிகை ராகினி திவேதி இன்று காலை பெங்களூருவில் கைது செய்யப்பட்டார்.
கர்நாடகா மாநிலம் பெங்களூரு மாநகரில் கடந்த வாரம் போதை பொருட்கள் கடத்திய புகாரில் அனிதா என்ற இளம்ெபண்ணை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் கன்னட திரையுலகில் உள்ள பல நட்சத்திரங்கள், இசையமைப்பாளர்கள் உள்ளிட்ட பலருக்கு போதை பொருட்கள் விற்பனை செய்து வருவதாக கூறியிருந்தார். இதனிடையில் பத்திரிகையாளரும் திரைப்பட தயாரிப்பாளருமான இந்திரஜித் லங்கேஷ், பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் கொடுத்த புகாரில் 15 முன்னணி நடிகர், நடிகைகள் போதை பொருள் பயன்படுத்துவதாகவும் பலருக்கு போதை பொருள் விற்பனை செய்யும் மாபியா கும்பலுடன் தொடர்பு இருப்பதாக தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக இரு நாட்கள் இந்திரஜித் லங்கேஷிடம் பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தியதை தொடர்ந்து புகார் தொடர்பாக கன்னட நடிகைகள் ராகினி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி ஆகிேயாருக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பினர். இருவரும் நேற்று விசாரணைக்கு ஆஜராகவில்லை. ராகினி வரும் திங்கட்கிழமை ஆஜராவதாகவும் சஞ்சனா தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக சிசிபி போலீசாருக்கு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று காலை பெங்களூரு எலங்காவில் உள்ள நடிகை ராகினி திவேதி வீட்டிற்கு சென்ற சிசிபி போலீசார், அவரை கைது செய்தனர். மேலும் வீட்டில் சுமார் 3 மணி நேரம் சோதனை நடத்தினர்.
அவரிடம் இருந்து 4 செல்போன்களை பறிமுதல் செய்தனர். அதன்பின் பலத்த பாதுகாப்புடன் சாம்ராஜ்பேட்டையில் உள்ள சிசிபி அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகை ராகினி கைது செய்யப்பட்ட சம்பவம் கன்னட திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சிசிபி போலீசாரிடம் இந்திரஜித் கொடுத்துள்ள 15 நடிகர், நடிகையர் பட்டியலில் பெயர் உள்ளவர்களும் அச்சத்தில் உள்ளனர். இன்று மாலைக்குள் மற்றொரு நடிகையாக சஞ்சனா கல்ராணியை சிசிபி போலீசார் கைது செய்யும் வாய்ப்புள்ளதாக தெரியவருகிறது. போதை பொருள் மாபியா வழக்கு கர்நாடகாவில் சூடுப்பிடிக்க தொடங்கியுள்ளது. ஏற்கனவே நடிகையின் நண்பரான ஆர்டிஓ அலுவலக இன்ஸ்பெக்டர் ரவி கைது செய்யப்பட்டார்.
தற்ேபாது போதை பொருள் விவகாரத்தில் கைதான நடிகை ராகினி, தமிழ் திரைப்படங்களான ஜெயம் ரவி நடித்த நிமிர்ந்து நில், அறியான் ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதே, போதை பொருள் விவகாரத்தில் கன்னட டிவி நடிகை அனிகா மற்றும் கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த முகமது அனூப் (39), திருச்சூரை சேர்ந்த ரவீந்திரன் (37) ஆகியோர் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், முகமது அனூபுக்கும், திருவனந்தபுரம் தங்கக்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ரமீசுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதுதவிர கேரள மாநில மார்க்சிஸ்ட் செயலாளர் கோடியேறி பாலகிருஷ்ணனின் மகன் பினீஷ் கோடியேறிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதும் தெரியவந்தது.
இதை பினீஷ் கோடியேறியும் ஒப்புக்கொண்டார். இதுகுறித்து கேரள முஸ்லீம் லீக் இளைஞர் பிரிவு பொதுச் செயலாளரான பிரோஸ்தான் கூறுகையில், ‘முகமது அனூபுக்கும், பினீஷ் ேகாடியேறிக்கும் தொடர்பு உள்ளது. தற்போது போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கும், பினீஷ் கோடியேறிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது ெவளிப்படையாக தெரியவந்துள்ளது. எனவே இதுகுறித்து போலீஸ் தீவிர விசாரணை நடத்த வேண்டும்’ என்றார்.