மாணவியை கடத்தி பலாத்காரம் வாலிபர் கைது
11/6/2019 4:39:21 PM
திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் 10ம் வகுப்பு மாணவியை காதலிப்பதாக நடித்து பலாத்காரம் செய்த வாலிபரை கைது செய்தனர். கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே கல்லம்பலம் தட்டத்துமலை பகுதியை சேர்ந்தவர் அன்ஷாப் (25). இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் படிக்கும் 10ம் வகுப்பு மாணவியை காதலிப்பதாக கூறி அவரை பல இடங்களுக்கும் அழைத்து சென்றுள்ளார். அப்போது லாட்ஜில் அறை எடுத்து தங்கி மாணவியை பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இந்த நிலையில் மாணவி திடீரென மாயமானர்.
இதுகுறித்து அவரது பெற்றோர் கொடுத்த புகாரின்படி, பள்ளிக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் மாணவி அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. போலீசார் அங்கு சென்று மாணவியை மீட்டு அன்சாப்பை கைது செய்தனர். பின்னர் அவரை ஆற்றிங்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்.