இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட நிலையில் மத்திய அரசின் 106 சட்டங்கள் இனி காஷ்மீருக்கு பொருந்தும்

10/9/2019 2:31:41 PM
சசிகலா வீட்டை உடனே இடிக்க உத்தரவு: தஞ்சை மாநகராட்சி நோட்டீஸ் ஒட்டியது ஊரக உள்ளாட்சி தேர்தல் வேட்பு மனு தாக்கல் நாளை தொடக்கம்: 13ம் தேதி கடைசி நாள்

புதுடெல்லி: சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட நிலையில், மத்திய அரசின் 106 சட்டங்கள் இனி காஷ்மீருக்கு பொருந்தும் என்று, மத்திய அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆக. 5ம் தேதி ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது பிரிவு மற்றும் 35ஏ பிரிவை மத்திய அரசு ரத்து செய்தது. தொடர்ந்து ஜம்மு-காஷ்மீரை, ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் என்று 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இதை எதிர்த்து ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கிட்டத்தட்ட 65 நாட்களாகியும் காஷ்மீரில் இயல்புநிலை திரும்பவில்லை. அரசியல் தலைவர்கள் இன்னும் வீட்டுச் சிறையிலேயே அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால் ஏற்படும் நன்மைகள் குறித்து மத்திய அரசு, அம்மாநில பத்திரிகைகளில் முழுப்பக்க விளம்பரம் கொடுத்துள்ளது. மேலும், சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு பின்னர், காஷ்மீருக்கு பொருந்தக்கூடியதாக மாறியுள்ள மத்திய சட்டங்கள் குறித்தும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய அரசு செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது: சிறப்பு அந்தஸ்து நீக்கப்படுவதற்கு முன்பு, ஜம்மு - காஷ்மீரில் மத்திய அரசின் சட்டங்களை அமல்படுத்துவது குறைவான அளவிலேயே இருந்தது. பொதுவாக மத்திய அரசின் திட்டங்கள் யாவும், காஷ்மீர் சட்டசபை, மத்திய சட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தால்தான், அவற்றை அங்கு அமல்படுத்த முடியும். இதனால் பெரும்பாலான சட்டங்களை அமல்படுத்த முடியவில்லை. எனவே, இந்த சட்டங்களால் கிடைக்கும் பலன்களை காஷ்மீர் மக்கள் அனுபவிக்க முடியவில்லை. மேலும், மத்திய அரசு நிதியின் பெரும்பகுதி, ஏழைகளை சென்றடையவில்லை.

தற்போது சிறப்பு பிரிவு நீக்கப்பட்டதால், ஊழலுக்கு எதிரான அனைத்து சட்டங்களும் காஷ்மீருக்கும் பொருந்தும். 106 மத்திய அரசு சட்டங்களும், 9 அரசியல் சட்ட திருத்தங்களும் காஷ்மீருக்கு பொருந்தும். தேசிய சிறுபான்மையினர் ஆணைய சட்டம், கல்வி உரிமை சட்டம், பெற்றோர் பராமரிப்பு - நலவாழ்வு சட்டம், பெண்கள் மற்றும் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு பலனளிக்கும் சட்டங்கள், ஊழலை காட்டிக்கொடுப்போருக்கு பாதுகாப்பு அளிக்கும் சட்டம் போன்ற சட்டங்கள் இனிமேல் காஷ்மீருக்கு பொருந்தும். மேற்கண்ட சட்டங்கள் முழுமையாக அமலுக்கு வரும்போது, அனைவருக்குமான கல்வித்தரம் உயரும். குறிப்பாக, ஏழைக் குழந்தைகளிடம் கல்வி சென்றடையும். கல்வி, தொழில் வளம், சுற்றுலா ஆகியன வளர்ச்சியடையும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் சில
  • வேட்புமனுவில் தகவல்களை மறைத்த மாஜி முதல்வர் வழக்கு: ஜனவரி 4ம் தேதிக்கு தள்ளி வைப்பு



  • ஜெகன் ஆட்சியில் மதமாற்றம் அதிகம்: நடிகர் பவன் கல்யாண் பரபரப்பு பேட்டி



  • ‘பாதிரியார்கள் குறித்து திடுக்கிடும் தகவல்கள்’ கன்னியாஸ்திரி எழுதிய புத்தகத்துக்கு தடைகோரிய மனு தள்ளுபடி



  • கர்நாடகாவில் 15 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வாக்கு பதிவு தொடங்கியது



  • 10 நாட்களுக்குள் வீட்டை காலி செய்ய வேண்டும்: ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்...மாவோயிஸ்ட் கடிதத்தால் உ.பி-யில் பரபரப்பு



  • அதிகாரிகளிடம் விவரம் கொடுத்துள்ளேன்: ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலைக்கு உடன்படித்தவர்கள்தான் முக்கிய காரணம்...தந்தை பகீர் பேட்டி



  • அரசியல் ரீதியாக மோத முடியுமா?....ஆந்திர முதல்வருக்கு சந்திரபாபு நாயுடு சவால்



  • கார்கள் பதிவு செய்து ரூ.25 லட்சம் வரி ஏய்ப்பு நடிகர் சுரேஷ்கோபி எம்பி மீது போலீசார் குற்றப்பத்திரிகை



  • ஐஎஸ் முகாமில் சேர்ந்து பயற்சி பெற்ற கேரளாவை சேர்ந்த இளம் பெண் ஆப்கன் ராணுவத்தில் சரணடைந்தார்: இந்தியா கொண்டுவர என்ஐஏ நடவடிக்கை



  • நடிகை அலியாபட் கதறி அழுதார்: என் அக்காவை டார்ச்சர் செய்துவிட்டேன்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com