2003ல் நடந்தது போல் இப்போதும்... தென்னாப்பிரிக்காவை துரத்தும் துரதிர்ஷ்டம்...அரையிறுதியில் நுழையும் வாய்ப்பு பறிபோனது
6/24/2019 3:34:20 PM
லண்டன்: உலக கோப்பை லீக் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், கடைசி 4 இடங்களில் புள்ளி பட்டியில் இருந்த தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு முன்னேற வேண்டும் என்றால் நேற்று நடந்த போட்டியில் கட்டாயம் வெல்ல வேண்டிய நிலையில் லார்ட்ஸ் மைதானத்தில் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி 308/7 ரன்களை குவித்தது. பின்னர் ஆடிய தென்னாப்பிரிக்கா 259/9 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. அதனால், தென்னாப்பிரிக்கா அணி அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்தது.
49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்று பெற்ற பாகிஸ்தான் அரையிறுதியில் நுழைவதற்கான வாய்ப்பை பெற்றுள்ளது. 2003ம் ஆண்டு உலகக் கோப்பைக்கு பின் தற்போது இரண்டாவது முறையாக தொடக்க சுற்றோடு தென்னாப்பிரிக்கா வெளியேறுகிறது. புள்ளி பட்டியலை பொறுத்தவரை, நியூசிலாந்து 11 புள்ளிகளுடன் முதலிடம்; 10 ஆஸ்திரேலியா 10 புள்ளிகளுடன் 2வது இடம்; 9 புள்ளிகளுடன் இந்தியா 3வது இடம்; 8 புள்ளிகளுடன் இங்கிலாந்து 4வது இடத்தில் உள்ளன. இந்த 4 அணிகளும் அரையிறுதியில் நுழைவதற்கான வாய்ப்பை பெற்றிருந்தாலும் கூட, மற்ற அணிகளுடன் ஒப்பிடும் போது இந்திய அணி இன்னும் ஒரு ஆட்டத்தை ஆட வேண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.