விபத்தில் 3 மாணவர்கள் பலி
2/12/2019 3:16:15 PM
பாப்பிரெட்டிப்பட்டி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே குப்பநத்தம் பகுதியை சேர்ந்தவர்கள் ராஜேஷ் (19), நித்தீஸ் (18), அரவிந்த்(20). நண்பர்களான இவர்கள் 3 பேரும், ஊத்தங்கரை அரசு கல்லூரியில் படித்து வந்தனர். இந்நிலையில், திருச்செங்கோட்டில் நடந்த நண்பர் வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்டு 3 பேரும் ஒரே இருசக்கர வாகனத்தில் நேற்று மாலை ஊத்தங்கரைக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். மஞ்சவாடி கணவாய் அருகே கோம்பூர் பகுதியில் வந்தபோது, வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், இருசக்கர வாகனத்தின் பின்புறம் மோதியது. இதில், நிலை தடுமாறி கீழே விழுந்த 3 பேர் மீதும் வாகனம் ஏறியதில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.