புழல் ஒன்றிய திமுக சார்பில் 3 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம்
2/11/2019 3:45:01 PM
புழல்: புழல் ஒன்றியத்தில் அடங்கிய கிராண்ட்லைன், வடகரை, தீர்த்தங்கரைபட்டு ஆகிய 3 ஊராட்சிகளிலும் திமுக சார்பில் நேற்று மாலை கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் ஜெகதீசன் தலைமை தாங்கினார். ஒன்றிய அவைத்தலைவர் திருமால், ஊராட்சி செயலாளர்கள் சுதாகர், அற்புதராஜ், ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டங்களில் சாமியார் மடம், பாபா நகர், கிருஷ்ணா நகர், தண்டல்கழனி ஆகிய பகுதிகளில் பொதுப்பணி துறை சார்பில் கட்டப்பட்ட தரமற்ற நிலையில் உபரிநீர் கால்வாய் கட்டப்பட்டு வருகின்றன. இவை மழைக்காலத்தில் உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகும் அபாயநிலை உள்ளது. புழல் ஒன்றியத்தில் உள்ள 7 ஊராட்சிகளும் பொன்னேரி தாசில்தார் அலுவலகத்தில் இணைக்கப்பட்டு உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் சுமார் 40 கிமீ தூரம் பல்வேறு பணிகளுக்காக அலையவேண்டி உள்ளது. இப்பகுதிகளை மீண்டும் மாதவரம் தாசில்தார் அலுவலகத்துடன் இணைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.