பிரான்ஸ் அரையிறுதி வெற்றியை குகையில் சிக்கி மீண்ட மாவீரர்களுக்கு சமர்ப்பிக்கிறோம்: போக்பா உருக்கம்
7/12/2018 4:27:26 PM
மாஸ்கோ : உலக கோப்பை தொடரில் பைனல் ஆட்டத்திற்கு சென்றுள்ள பிரான்ஸ் அணியின் வெற்றியை தாய்லாந்து வீரர்களுக்கு சமர்பிப்பதாக கூறியுள்ளார் அந்த அணியின் நட்சத்திர போக்பா கூறியுள்ளார்.மேலும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடந்த முதல் அரை இறுதியில் பிரான்ஸ் 1-0 என பெல்ஜியத்தை வென்றது இந்த வெற்றிக்கு காரணமாக சாமுவேல் இருந்தார், இந்த நிலையில் அந்த வெற்றியை குகைக்குள் சிக்கி மீண்ட கால்பந்து வீரர்களுக்கு சமர்ப்பணம் செய்வதாக போக்பா கூறியது பல்வேறு தரப்பிலிருந்து வரவேற்பை பெற்றுள்ளது.
சி பிரிவில் இடம்பெற்றிருந்த பிரான்ஸ் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 2-1 என போராடி வென்றது. பெருவுக்கு எதிராக 1-0 என்று வென்றது. டென்மார்க்குடன் கோல் ஏதும் அடிக்காமல் டிரா செய்தது. நாக் அவுட் சுற்றில், கோப்பையை வெல்லக் கூடிய அணிகளில் ஒன்றாக கருதப்பட்ட மெஸ்ஸியின் அர்ஜென்டினாவை 4-3 என வென்று காலிறுதிக்கு முன்னேறியது. காலிறுதியில் முன்னாள் சாம்பியனான உருகுவேயை 2-0 என வென்றது குறிப்பிடத்தக்கது ஆகும்.
குகையில் சிக்கி மீண்ட 12 சிறுவர்களோடு அவர்களது கோச்சினையும் ரஷ்யாவிற்கு உலக கோப்பை இறுதிப் போட்டியினை காண வருமாறு பிபா அழைத்தது. ஆனால் அவர்களை மருத்துவமனையில் தொடர் கண்காணிப்பு வளையத்தில் வைத்திருப்பதால் அவர்களால் வரமுடியாத சூழல் இருப்பதாக தாய்லாந்து அரசு தெரிவித்து விட்டது.