பைக் மீது மோதி ஷேர் ஆட்டோ கவிழ்ந்தது: ஒருவர் சாவு; 8 பேர் படுகாயம்
7/12/2018 4:25:28 PM
திருக்கழுக்குன்றம்: காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த அரிதாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர்கள் ஷகிலா (37), டில்லியம்மாள் (19), சத்யா (26), புஷ்பா (23) மற்றும் திம்மூர் கிராமத்தை சேர்ந்த சகுந்தலா (38), ஜீவா (20). இவர்கள் அனைவரும் மறைமலைநகரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகின்றனர்.
நேற்று காலை வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டு திருக்கழுக்குன்றம் திரும்பினர். பின்னர், அங்கிருந்து வீட்டிற்கு ஷேர் ஆட்டோவில் சென்றனர். கருங்குழி சாலை என்ற பகுதியில் வந்தபோது எதிரே வேகமாக வந்த பைக், ஆட்டோ மீது மோதியதில் ஆட்டோ தலைகீழாக கவிழ்ந்தது. இந்த விபத்தில் செங்கல்பட்டை அடுத்த திருவடி சூலத்தை சேர்ந்த ரமேஷ் (34) செல்வமணி (30) ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். 8 பேர் படுகாயம் அடைந்தனர்.திருக்கழுக்குன்றம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் செல்வமணி பரிதாபமாக உயிரிழந்தார்.