வங்கி லாக்கரில் ஒரு கிலோ நகை திருட்டு: கேஷியர் உள்பட 3 பேர் கைது
6/13/2018 2:48:35 PM
திருமலை: வங்கி லாக்கரில் இருந்த 56 லட்சம், 1 கிலோ நகை திருடிய கேஷியர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம் ரங்க சமுத்திரம் பகுதியில் பாரத ஸ்டேட் வங்கி உள்ளது. இங்கு தலைமை காசாளராக குருமோகன் உள்ளார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு குருமோகன் வங்கியில் வாடிக்கையாளர் செலுத்திய பணம், நகைகளுடன் தலைமறைவானார். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குருமோகனை தேடி வந்தனர். இந்நிலையில், குருமோகன் மற்றும் அவரது நண்பர்கள் உட்பட 3 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 56 லட்சம், 1 கிலோ மதிப்புள்ள தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். மேலும், குருமோகனிடம் நடத்திய விசாரணையில் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்ததில் நஷ்டம் ஏற்பட்டதால், நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து வாடிக்கையாளர்களின் பணம், நகைகளை திருடிச்சென்றதாக தெரிவித்தார். போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரித்து வருகின்றனர்.