தோள்பட்டை வலியில் சிக்கிய டேல் ஸ்டெய்ன் மீண்டும் டெஸ்ட் தொடரில் களமிறங்குகிறார்
6/12/2018 5:05:45 PM
டர்பன்: தென்னாப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் அவரது தோள்பட்டை வலியிலிருந்து மீண்டு வந்து உடல் தகுதியை அடைந்துள்ளார். இதன் காரணமாக அடுத்த மாத இறுதியில் இலங்கை செல்லும் தென்னாப்பிரிக்க அணியில் மீண்டும் இடம் பிடித்துள்ளார்.டேல் ஸ்டெயின் தோள்பட்டை வலியால் அவதிப்பட்டு வந்தார். கடைசியாக இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடினார். அதன் பிறகு அவருக்கு சிக்கல் உண்டானது. அவருக்கு தோள் பட்டையில் காயம் உண்டாகி, கடந்த சில மாதங்களாக அவதிப்பட்டு வருகிறார். ஐபிஎல் தொடரிலும் விளையாடவில்லை. கடுமையான பயிற்சிக்கு பின்னர் மீண்டும் தனது உடல் தகுதியை அடைந்துள்ளார். இதனால் இலங்கை அணிக்கெதிரான டெஸ்ட் தொடருக்கு 15 பேர் கொண்ட தென்னாப்பிரிக்க அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தென்னாப்பிரிக்கா டெஸ்ட் அணியின் பயிற்சியாளர் கிப்சன் இதனை தெரிவித்துள்ளார். மேலும் இந்த தொடரில் இடம் பெறும் நபர்களின் பெயர்களை தென்னாப்பிரிக்கா அறிவித்துள்ளது. அதில் ஃபாஃப் டூ பிளெசிஸ், ஹாஷிம் அம்லா, டெம்பா பவூமா, குவின்டன் டி காக், தீனிஸ் டி ப்ரெய்ன், டீன் எல்கர், ஹென்ரிச் க்ளாசென், கேசவ் மஹாராஜ், ஐடன் மார்கிராம், வெர்னான் பிலெண்டர், கிகிஸோ ரபாடா, தாபிரியஸ் ஷம்ஸி, டேல் ஸ்டெயின், பெர்ன் ஷான் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.