தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்
4/21/2017 3:19:40 PM
தஞ்சை: தஞ்சை பெரிய கோயில் சித்திரை திருவிழா இன்று காலை 6.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி சுவாமிகள் கோயிலுக்குள் புறப்பாடாகி கொடியேற்றப்பட்டது. நாளை காலை பல்லக்கு புறப்பாடும், மாலை சிம்ம வாகனத்தில் சுவாமிகள் புறப்பாடும் நடக்கிறது. 23ம் தேதி மாலை மூஞ்சுறு வாகனத்தில் விநாயகர் புறப்பாடு, 24ம் தேதி மாலை மேஷ வாகனத்தில் சுப்பிரமணியர் சுவாமிகள் புறப்பாடு, 25ம் தேதி மாலை வெள்ளி மயில் வாகனத்தில் சுப்பிரமணியர் சுவாமிகள் புறப்பாடு நடக்கிறது. 26ம் தேதி காலை சுப்பிரமணியர் சுவாமிகளுக்கு சந்தனகாப்பு அலங்காரம், மாலை சைவ சமயாச்சாரியர் நால்வர் புறப்பாடு நடக்கிறது.
27ம் தேதி மாலை சூரிய பிரபையில் சுவாமிகள் புறப்பாடு, 28ம் தேதி மாலை சந்திர பிரபையில் சுவாமிகள் புறப்பாடு, 29ம் தேதி மாலை கோயில் வசந்த மண்டபத்தில் சுவாமிகள் பிரவேசம், செங்கோல் வைபவம், 30ம் தேதி மாலை சுவாமிகள் முத்துப்பல்லக்கில் புறப்பாடு, 1ம் தேதி மாலை பூதவாகனத்தில் சுவாமிகள் புறப்பாடு, 2ம் தேதி வெள்ளியானை வாகனத்தில் சுவாமிகள் புறப்பாடு, 3ம் தேதி மாலை வெள்ளி யானை வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடக்கிறது. அன்றைய தினம் ஓலைச்சப்பரத்தில் சுவாமி, அம்பாள் புறப்பாடும் நடக்கிறது.4ம் தேதி மாலை சுவாமிகள் கைலாச பர்வத வாகனத்தில் புறப்பாடு நடக்கிறது. 5ம் தேதி விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடக்கிறது. அன்று காலை 5.30 மணிக்கு விநாயகர், நீலோத்பலாம்பாள், வள்ளி, தெய்வானை, சுப்பிரமணியர் சுவாமிகள், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகளுடன் தியாகராஜர், கமலாம்பாள் சுவாமிகள் முத்துமணி அலங்கார சப்பரத்தில் புறப்பட்டு தேர் இருக்கும் இடத்தை அடைகின்றனர்.