பேரனுடன் நாடகம் பார்த்த ரஜினி
1/10/2017 5:34:38 PM
ரஜினிக்கு நாடகத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை உண்டு. கே.பாலசந்தர் நாடகத்தில் ரஜினியும், கமலும் இணைந்து நடிப்பதற்கான முயற்சி முன்பு மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அது கைகூடவில்லை. அவ்வப்போது ஒய்.ஜி.மகேந்திரன் நடத்தும் நாடகங்களுக்கு அவரது அழைப்பின்பேரில் செல்வது வழக்கம். காசேதான் கடவுளடா 65வது ஷோவுக்கு வரும்படி ரஜினிக்கு அழைப்பு விடுத்திருந்தார் ஒய்.ஜி.மகேந்திரன். அதை ஏற்று பேரனுடன் நாடகத்தை காண வந்திருந்தார் ரஜினி. மேடையின் முன் வரிசையில் அமர்ந்து கைதட்டி நாடகத்தை ரசித்து பார்த்தார். இதுபற்றி ஒய்.ஜி.மகேந்திரன் கூறும்போது,’ரஜினி தனது மனைவி மற்றும் பேரனுடன் நாடகத்தை பார்க்க வந்திருந்தார்.
என்னிடம் அவர் பேசும்போது கடந்த 30 வருடமாக நீங்கள் எப்படி ஒரே எனர்ஜியுடன் பணியாற்றுகிறீர்கள் என்று பாராட்டினார். முழுமையாக நாடகத்தை பார்த்து பாராட்டியதுடன் நாடக குழுவினருடன் செல்பி, குரூப்போட்டோவுக்கு போஸ்தந்தார்’ என்றார். நடிகர் கார்த்திக், நடிகை கோவை சரளா ஆகியோரும் நாடக விழாவில் பங்கேற்றனர். மறுநாள் நடந்த நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டு பாராட்டினார்.