Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2015
26
Feb
வசீகர பேச்சால் ஆண்களை மயக்கிய கல்யாண ராணி : 5வது திருமணத்துக்கு முயன்ற இளம்பெண் போலீசில் சிக்கினார் : பரபரப்பு தகவல்கள்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

அண்ணாநகர்: பல ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து, அவர்களிடம் இருந்து நகை, பணத்தை பறித்த இளம் பெண்ணை போலீசார் கைது செய்தனர்.  விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை முகப்பேர் கிழக்கு டிவிஎஸ் அவென்யூவை சேர்ந்தவர் சீனிவாசன் (38). வீடு, அலுவலகங்களில்  உள் அலங்காரம் செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த நவம்பர் மாதம் மணமகன் தேவை என்ற விளம்பரத்தை இணையதளத்தில் பார்த்துள்ளார். அதில்,  மணமகளின் பெயர், கோவையை சேர்ந்த காயத்ரி (30), பிஎஸ்சி பட்டதாரி என்று குறிப்பிட்டு இருந்தது. உடனே அதில் இருந்த செல் எண்ணில் காயத்ரியை தொடர்பு  கொண்டு சீனிவாசன் பேசினார். இதையடுத்து இருவருக்கும் திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு பின் காயத்ரியின் நடவடிக்கையில் சீனிவாசனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. சில தினங்களுக்கு முன்பு காயத்ரியின் செல்போனை பார்த்தபோது அதில்,  ஏராளமான ஆண்களின் எண்கள் இருந்தன. உடனே சீனிவாசன் அந்த நம்பர்களுக்கு தொடர்பு கொண்டு பேசிய போது காயத்ரிக்கு ஏற்கனவே பல திருமணம் முடிந்தது  தெரிய வந்தது.உடனே இது குறித்து சீனிவாசன் நேற்று திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பிரான்வின் டேனியிடம் புகார் கொடுத்துள்ளார்.  புகாரின் பேரில் போலீசார் காயத்ரியை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. காயத்ரிக்கு கடந்த 2010ம் ஆண்டு தி.நகரை சேர்ந்த தொழில் அதிபர் நரசிம்மராவ் (40), என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. திருமணம் முடிந்த சில தினங்களில்  அவரிடம் இருந்து ஏமாற்றி நகை, பணம் ஆகியவற்றை வாங்கி கொண்டு பிரிந்து சென்றார்.

பின்னர் 2012ம் ஆண்டு திருச்சியை சேர்ந்த தொழில் அதிபர் ரவிக்குமார்(35), என்பவரை திருமணம் செய்து கொண்டு, அவரி டம் இருந்து காயத்ரி விவகரத்து பெற்றார்.  இதையடுத்து 2013ம் ஆண்டு மாம்பலத்தை சேர்ந்த ராஜகோபால்(33) என்பவருடன் திருமணம் நடந்தது. அவரிடம் இருந்து பிரிந்து சென்றுள்ளார். அடுத்ததாக சீனிவாசன்  என்பவரை திருமணம் செய்துள்ளார். திருமணம் முடிந்த பிறகு ' கணவன்களிடம் நான் ரொம்பவும் கஷ்டப்படுகிறேன், ஆதலால் எனக்கு பணம் வேண்டும்'  என்று கூறி  அவர்களிடம் இருந்து நகை, பணம் ஆகியவற்றை பெற்றுள்ளார். முக்கியமாக சீனிவாசனை திருமணம் செய்து கொண்ட பிறகு, அம்பத்தூரை சேர்ந்த பாலாஜி  என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் பாலாஜிக்கும், காயத்ரிக்கும் திருமணம் நடக்க ஏற்பாடு கள் செய்யப்பட்டு வந்துள்ளது. காயத்ரி குறித்த உண்மையை  பாலாஜியின் குடும்பத்துக்கு போலீசார் இன்று தெரிவித்தனர். இதனை கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபோல பல ஆண்களை ஏமாற்றி காயத்ரி திருமணம்  செய்திருக்கலாம் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. போலீசார் காயத்ரியின் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement