Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2012
12
Mar
மணல் கொள்ளை தடுத்தால் மரணம்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

கோடி கோடியாய் கொட்டும் ஆற்றுமணல் கடத்தலுக்கு எதிராக யார் நின்றாலும் லாரி ஏற்றி கொன்று விடுகிறார்கள். அதுபோலீஸாக இருந்தாலும் சரி, பொது மக்களாக இருந்தாலும் சரி. இயற்கை வளம் பாதிக்கிறது. நிலத்தடிநீர் பாதிக்கிறது என்பதுபற்றியெல்லாம் கடத்தல் கும்பலுக்கு கவலை இல்லை. அவர்களுக்கு கொட்டும் வருமானம் நின்றுவிடக் கூடாது. நெல்லை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஆற்றுமணல் கடத்தலை தடுத்திருக்கிறார். அவரை லாரி ஏற்றி கொன்றுவிட்டனர். நெல்லை மாவட்டம் திசையன் விளையில் ஓடுகிறது நம்பியாறு. இங்கிருந்து தினமும் லாரிகளில் கேரளாவுக்கு மணல் கடத்தப்படுகிறது. மணல் கடத்தலை தடுக்கும் நோக்கில் சதீஷ் குமார் என்ற இளைஞர், ஊர் மக்களை திரட்டி தட்டிக் கேட்டிருக்கிறார்.

நள்ளிரவில் நம்பி ஆற்றில் ஒரு கும்பல் லாரியில் மணல் அள்ளியது. இதுகுறித்து ஊர் மக்களுக்கு தகவல் கொடுத்த அவர் நம்பியாறுக்கு பைக்கில் சென்றார். சதீஷ் குமார், நண்பர்களுடன் ஒரு சாலையிலும், பொது மக்கள் இன்னொரு சாலையிலும் வழி மறித்து நின்றனர். ஆனால் மணல் ஏற்றி வந்த லாரி நிற்காமல் சதீஷ் குமார் மீது வேகமாக மோதியது. தூக்கி வீசிப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் லாரியை அடித்து நொறுக்கினர். திருச்செந்தூர் நாகர்கோவில் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். லாரி டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர். சம்பவ இடத்துக்கு அதிகாரிகள் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டுள்ளது.

ஆற்று வளத்தை காக்க மணல் கொள்ளையை தடுக்க வேண்டும் என்று நினைத்த இளைஞர் பலியாகிவிட்டார். இரண்டு நாள் கடத்தல் நடக்காது. பின்னர் வழக்கம்போல் கடத்த ஆரம்பித்து விடுவார்கள்.
அரசியல்வாதிகள், அதிகாரிகள், போலீஸ் என அதிகார வர்க்கத்தில் உள்ள அனைவருக்கும் கட்டிங் போகிறது. இதனால் மணல் கடத்தல் கனஜோராக நடக்கிறது. எதிர்ப்பு கிளம்பினால் யாராக இருந்தாலும் மரணம்தான். மத்திய பிரதேசத்தில் ஐபிஎஸ் அதிகாரியையே டிராக்டர் ஏற்றி கொன்றது ஒரு கடத்தல் கும்பல். இப்போது இங்கு ஒரு இளைஞர் கொல்லப்பட்டிருக்கிறார். இப்படி நாடு முழுவதும் எத்தனையோ பேர் பலியானாலும் மணல் கொள்ளை மட்டும் தங்கு தடையில்லாமல் நடந்துகொண்டுதான் இருக்கிறது. காரணம் கோடி கோடியாய் கொட்டும் பணம்.

கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement